சிதம்பரம் நகராட்சியில் ஆட்டோவில் சென்று மக்கள் பணியாற்றும் நகரமன்ற துணைத்தலைவர்
2022-09-21@ 12:23:13

சிதம்பரம் : சிதம்பரம் நகராட்சியில் நகர்மன்ற துணைத் தலைவர், தனது ஆட்டோவில் சென்று அன்றாடம் மக்கள் பணியாற்றுவது அப்பகுதி மக்களை வியப்படைய செய்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரமன்ற துணைத்தலைவராக பதவி வகிக்கும் முத்துக்குமரன் கடந்த 22 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் சிதம்பரம் நகர மன்ற தேர்தலில் 33 வது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு நகர மன்ற துணைத் தலைவராக பதவி ஏற்று கொண்டார். நகராட்சி அலுவலகத்துக்கு தன்னுடைய ஆட்டோவில் அலுவலகம் வந்து அலுவலகப் பணிகளை கவனித்து விட்டு, பொதுப்பணிகளையும் கவனித்து வருகிறார்.
நகர மன்ற துணைத் தலைவரான பிறகும் தன்னுடைய வாழ்வாதாரமான ஆட்டோ ஓட்டுவதை விடாமல் செய்து கொண்டு வருகிறார். வார்டு உறுப்பினரான உடனே தன்னுடைய பதவிக்கு ஏற்றார் போல் வண்டி வாகனத்தை வாங்கி உலாவரும் இந்த காலத்தில் தனக்கு நகர மன்ற துணைத் தலைவர் பதவி வந்தாலும், தான் ஓட்டி வந்த ஆட்டோ ஓட்டுனர் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.
கொரோனா காலங்களில் நோயாளிகளை தன்னுடைய ஆட்டோவிலேயே இலவசமாக ஏற்றி சென்று சிதம்பரம் அரசு மருத்துவமனை, மற்றும் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்த்து பலரின் உயிர்களை காப்பாற்றியுள்ளார். இதற்காக அப்போதைய சிதம்பரம் சப் கலெக்டர் மதுபாலன் இவருக்கு சிறந்த சமூக சேவகர் என்ற நற்சான்றிதழ் கொடுத்துள்ளார். மேலும் மழை, வெள்ள, காலங்களில் ஏழை எளியோருக்கு தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார்.
தன்னுடைய வார்டு மக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொடுத்து உதவி செய்கிறார். இப்பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வேண்டிய அடிப்படை வசதிகளையும், மின்விசிறி வசதியும் செய்து கொடுத்துள்ளார். மக்களோடு மக்களாக செயல்பட்டு வரும் இவர் பதவி வந்தாலும், கவுரவம் பார்க்காமல் தனது அன்றாட பணிகள், முதல் அலுவலக பணிகள் வரை தன்னுடைய ஆட்டோவில் சென்று செய்து வருகிறார்.
மேலும் செய்திகள்
அண்ணாமலை பல்கலையில் மிகையாக உள்ள பேராசிரியர்கள் உள்பட 1,390 பேர் பிற துறைகளுக்கு பணிநிரவல்: உத்தரவை திரும்ப பெற ஆசிரியரல்லா பணியாளர்கள் கோரிக்கை
சதுரகிரி கோயிலுக்கு செல்ல தடையால் தாணிப்பாறை வனத்துறை கேட் வெறிச்
வாணியம்படி அருகே தேசிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர்: நடவடிக்கைக்கு பொதுமக்கள் கோரிக்கை
திருப்பத்தூர் அருகே ரூ.11 கோடியில் ஜவ்வாதுமலை-புதூர்நாடு சாலை பணி: மார்ச் இறுதிக்குள் முடியும் என கோட்ட பொறியாளர் தகவல்
சேலம்-நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசுவாமி கோயிலில் நாளை தைப்பூசத்திருவிழா தேரோட்டம்
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எதிரொலி: தொப்பூர் கணவாயில் விபத்து உயிரிழப்பு குறைந்தது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!