திருப்போரூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்: கலெக்டரிடம், பொதுமக்கள் கோரிக்கை
2022-09-21@ 03:17:58

திருப்போரூர்: திருப்போரூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என பொதுமக்கள், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். திருப்போரூர் அரசு மேல்நிலைப்பள்ளியையொட்டி பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது. செங்கல்பட்டு மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள் இந்த மைதானத்தில்தான் நடைபெறும். அதுமட்டுமின்றி திருப்போரூர், கண்ணகப்பட்டு, காலவாக்கம், தண்டலம், ஆலத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விளையாட்டு குழுக்களை சேர்ந்தவர்களும் தங்களது விளையாட்டு போட்டிகளை இந்த மைதானத்தில்தான் நடத்தி வருகின்றனர்.
இது மட்டுமின்றி காலை, மாலை வேளைகளில் ஏராளமான பொதுமக்கள் இந்த மைதானத்தில் தான் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இந்நிலையில், தனி நபர்கள் சிலர் புகார் கூறியதன் அடிப்படையில் விளையாட்டு மைதானத்தின் கதவுகள் பூட்டப்பட்டு பொதுமக்களும், உள்ளூர் இளைஞர்களும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதனால், கடந்த 6 மாதமாக இந்த விளையாட்டு மைதானத்தில் எந்த விளையாட்டுப் போட்டிகளும் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில், திருப்போரூர் சமத்துவ இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்குழு சார்பில் அனைத்து கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்திடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.
இந்த மனுவில், ‘திருப்போரூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தை அனைத்து தரப்பு இளைஞர்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் திறந்து விட வேண்டும். மேலும், தண்டலம் கிராம பெரிய ஏரியின் நீர்நிலை ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
மேலும் செய்திகள்
உயிர் நீத்த காவல் துறையினருக்கு இறுதி மரியாதை தொடர்பாக அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை.!
வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் இன்று வழங்கப்படும் என அறிவிப்பு: உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து இபிஎஸ் அணி நடவடிக்கை!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கன மழை காரணமாக நெற்பயிர் பாதித்த உழவர்களுக்கு உரிய இழப்பீடு அன்புமணி வலியுறுத்தல்
அண்ணா நினைவுநாளையொட்டி இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை
4 லட்சம் பேர் எழுதுகின்றனர் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடங்கியது: சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!