ஐசிசி உலக கோப்பை டி20: நியூசிலாந்து அணி அறிவிப்பு
2022-09-21@ 00:38:21

வெலிங்டன்: ஐசிசி உலக கோப்பை டி20 போட்டித் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள இந்த தொடரில் (அக்.16 - நவ.13) இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா உள்பட 16 அணிகள் பங்கேற்க உள்ளன. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த தொடருக்கான அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று தங்கள் அணி வீரர்கள் விவரத்தை வெளியிட்டது. ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் முதல்முறையாக உலக கோப்பையில் விளையாட உள்ளனர்.
காயம் காரணமாக ஓய்வில் இருந்த ஆடம் மில்னே அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். கடந்த ஆண்டு உலக கோப்பையில் அதிரடி காட்டிய விக்கெட் கீப்பர் டெவன் கான்வே அணியில் தொடர்கிறார். தொடக்க ஆட்டக்கார் மார்ட்டின் கப்தில் தொடர்ந்து 7வது முறையாக உலக கோப்பையில் களம் காண உள்ளார். கேப்டனாக கேன் வில்லியம்சனுக்கு இந்த தொடர் முக்கியமானது. டெஸ்ட், ஒருநாள் தொடரில் சாதித்த வில்லியம்சன், டி20 தொடர்களில் தட்டுத்தடுமாறிக் கொண்டு இருக்கிறார்.
இந்த தொடரில் நியூசிலாந்து அணியின் செயல்பாட்டை பொறுத்தே அவர் கேப்டன் பதவியில் தொடர்வாரா என்பது தெரியும். உல கோப்பைக்கு முன்பாக, இதே அணி பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு எதிராக அடுத்த மாத தொடக்கத்தில் நடக்க உள்ள முத்தரப்பு டி20 தொடரில் விளையாட உள்ளது. நியூசிலாந்து டி20 அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், டிரென்ட் போல்ட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவன் கான்வே (விக்கெட் கீப்பர்), லோக்கி பெர்குசன், மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், ஈஷ் சோதி, டிம் சவுத்தீ.
மேலும் செய்திகள்
ரஞ்சி அரையிறுதி இன்று தொடக்கம் முன்னாள் சாம்பியன்கள் கர்நாடகா - சவுராஷ்டிரா மோதல்
சர்வதேச கிரிக்கெட் பிஞ்ச் ஓய்வு
சில்லி பாயின்ட்...
நாக்பூரில் நாளை மறுநாள் முதல் டெஸ்ட் தொடக்கம்; 4 ஸ்பின்னர்களுடன் களம் இறங்க இந்தியா திட்டம்
கில் தொடக்க வீரராக இருக்க வேண்டும்: ஹர்பஜன்சிங் பேட்டி
இந்தியாவை வென்றால் ஆஷஸை விட பெரிதாக இருக்கும்: ஸ்டீவ் ஸ்மித் பேட்டி
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!