திருப்பதி வெங்கடேஸ்வரா கல்லூரியில் ஆய்வு மாணவ பருவத்திலேயே உயர்ந்த இலக்கை நிர்ணயிக்க வேண்டும்-தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி பேச்சு
2022-09-20@ 13:00:00

திருமலை : திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கலை கல்லூரியில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அவர் பேசியதாவது: மாணவ பருவத்திலேயே உயர்ந்த இலக்கை நிர்ணயிக்க வேண்டும். அதை அடைவதே உண்மையான மகிழ்ச்சியாகும். நமது கலை கல்லூரிக்கு ஏ-பிளஸ் மதிப்பெண் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்திற்கு பொன்னான பாதையை உருவாக்கி பெற்றோருக்கு நல்ல பெயரை பெற்று தர படிப்பதே உண்மையான மகிழ்ச்சியாகும்.
ஆசிரியர்கள் தங்கள் பங்கை மிக சரியாக செய்கிறார்களா? என்று தங்களை தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். மாணவர்கள் உயர்ந்த இலக்கை அடைய தொடர்ந்து வழிகாட்ட வேண்டும்.
மாணவர்கள் நன்றாக படித்து எதிர்காலத்தில் எந்த உயர் நிலையை அடைந்தாலும் அவர்களை நினைவில் நிறுத்தும் வகையில் ஆசிரியர்களின் செயல்பாடு இருக்க வேண்டும். குரு-சிஷ்யர்களின் பந்தத்தை வலுப்படுத்தவும், சமுதாய முன்னேற்றத்திற்காக உழைக்கவும் ஆசிரியர்கள் ஊழைக்க வேண்டும். கல்வி தரத்தை மேம்படுத்துவதன் மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தான கல்வி நிறுவனங்களில் இடங்களுக்கு கடும் போட்டி நிலவும் சூழ்நிலையை கொண்டு வர வேண்டும்.
மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல் அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். பகவத் கீதை என்பது மனித சமுதாயம் தொடர்பான அறிவியல் போன்றது. அதை புரிந்து கொண்டு ஓரளவாவது கடைபிடித்தால் நல்ல மனிதராகலாம். மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் கல்வி நிறுவனங்களை தங்களது சொந்த கல்வியாக கருதி வகுப்பறைகள், வளாகங்கள், விடுதிகள், சமையல் அறைகளை சுத்தமாக வைத்திருக்க கடுமையாக உழைக்க வேண்டும்.
நல்ல வேலை அல்லது வேலைவாய்ப்பை பெற தேவையான சிவில் சர்வீஸ், வங்கிகள் மற்றும் பிற போட்டி தேர்வுகளில் மாணவர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப அவர்களை தயார்படுத்த தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கல்லூரி மற்றும் சமையலறை வளாகத்தில் உள்ள பயனற்ற பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். ஆய்வின்போது இணை செயல் அதிகாரி சதா பார்கவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
நாகேஸ்வரராவை தரக்குறைவாக பேசினார்:பாலகிருஷ்ணாவை ‘தாக்கிய’நாக சைதன்யா, அகில் பிரதர்ஸ்
ராஜ்பவன் மற்றும் முகாம் அலுவலகத்தில் கவர்னர், முதல்வர் தனித்தனியாக தேசிய கொடியேற்றினர்
உலகின் முதல் நாசி வழி கொரோனா மருந்து இந்தியாவில் அறிமுகம்: தனியாருக்கு ரூ.800; அரசுகளுக்கு ரூ.325
இணைய தளத்தில் பதிவேற்றம் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியானது
எல்லையில் கழிவுகள் பிரித்து எடுக்கும் ஆலை: கேரளா அரசு திட்டம், சுகாதாரக்கேடு ஏற்படும் என்று மக்கள் அச்சம்
டெல்லியில் 74வது குடியரசு தின விழா கோலாகலம் ஜனாதிபதி முர்மு தேசிய கொடி ஏற்றினார்: எகிப்து அதிபர் எல் சிசி சிறப்பு விருந்தினராக பங்கேற்பு
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!!