SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக கிராம மக்களுடன் திருமாவளவன் சந்திப்பு

2022-09-20@ 03:45:17

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள பகுதி மக்களை விசிக தலைவர் திருமாவளவன் நேற்று சந்தித்துப் பேசினார். காஞ்சிபுரம் மாவட்டம், பாரந்தூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில், காஞ்சிபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பரந்தூர், வளத்தூர், தண்டலம், நெல்வாய், மேல்பொடவூர், மடப்புரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட எடையார்பாக்கம், குனராம்பாக்கம் மகாதேவி மங்கலம், ஏகனாபுரம், சிங்கல்படி உள்ளிட்ட 12 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 4750 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பரந்தூர் விமான நிலையம் அமைக்க 12 கிராமத்தைச் சேர்ந்த கிராமங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிலும், குறிப்பாக விலை நிலங்களுடன் குடியிருப்புகளும் அகற்றப்பட வாய்ப்புள்ளதாக அறிந்து ஏகனாபுரம் மக்கள் தினம்தோறும் வேலைக்கு சென்று விட்டு வந்து இரவு நேரங்களில் போராட்டங்களை நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ேநற்று 55வது நாளாக ஏகனாபுரம் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டு வந்தார்.

பின்னர்,  ஏகனாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன் கூறியதாவது: பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக அரசு இரட்டைக் கொள்கையை கையாளுகிறதா என கேள்வி எழுப்புவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். 1350 ஏக்கர் நீர்நிலை பகுதியை அழித்தால் தான் விமான நிலையம் அமைக்க முடியும் எனில் பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் அரசு இரட்டை கொள்கையை கையாள்கிறதா என திருமாவளவன் கேள்வி, எழுப்பினர்.ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் 100க்கும் மேற்பட்ட இந்து கோயில்கள் அழிப்பதும் ஆரோக்கியமானது அல்ல, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் கம்பன் நீர் கால்வாய் 7 கி.மீ அழிவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆகவே, இவற்றை கருத்தில் கொண்டு அரசு செயல் திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும், நிலப்பரப்பில் விமான நிலையம் அமைக்க மாற்றம் செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது, மக்களின் கோரிக்கைகளை முதல்வரிடம் அனைத்தும் எழுத்துப்பூர்வமாக சந்தித்து வழங்க இருப்பதாக தொல்.திருமாவளவன் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-dmk-votes-2

  அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

 • scotland-bonfire-festival

  ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்