1930-40களில் நடக்கும் கதை தனுஷ் படத்தில் சந்தீப் கிஷன்
2022-09-20@ 00:12:54

சென்னை: வசந்த் ரவி நடித்த ‘ராக்கி’,செல்வராகவனுடன் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘சாணிக் காயிதம்’ ஆகிய படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் புதிய படம், ‘கேப்டன் மில்லர்’.இதில் மிகவும் வித்தியாசமான கேரக்டர் மற்றும் தோற்றத்தில் தனுஷ் நடிக்கிறார். பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன், செந்தில், அர்ஜூன், ஜி.சரவணன், சாய் சித்தார்த் இணைந்து தயாரிக்கின்றனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார்.
கடந்த 1930-40களின் பின்னணியில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படுகிறது. தமிழில் ‘யாருடா மகேஷ்’, ‘மாநகரம்’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘மாயவன்’, ‘கசடதபற’, ‘நரகாசூரன்’ போன்ற படங்களில் நடித்தவரும், தெலுங்கு ஹீரோவுமான சந்தீப் கிஷன், தனுஷுடன் இணைந்து இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார். தற்போது அவர் விஜய் சேதுபதி, கவுதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்து ‘மைக்கேல்’ என்ற பன்மொழிப் படத்தில் நடித்து வருகிறார். பேமிலிமேன் 2 வெப்சீரிஸிலும் சந்தீப் கிஷன் நடித்திருக்கிறார்.
மேலும் செய்திகள்
மதுரவாயல் அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு
திருவேற்காடு சாலையில் தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை
மூவரசன்பட்டு ஊராட்சியில் ரூ.67.17 லட்சத்தில் வளர்ச்சி பணி: கிராமசபை கூட்டத்தில் முடிவு
போலீஸ் சிறப்பு தணிக்கையில் 7,195 வாகனங்கள் சோதனை: போதையில் ஓட்டியதாக 84 பேர் சிக்கினர்
இறைச்சிக்காக விஷம் வைத்து கொல்லப்பட்ட நீர் பறவைகள்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
அருமந்தை கூட்டுச்சாலையில் பேருந்து நிழற்குடை அமைக்க கோரிக்கை
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!