டாஸ்மாக் கடைக்குள் புகுந்து ரகளை: பார் உரிமையாளர்கள் சங்க தலைவர் கைது
2022-09-19@ 02:09:48

பெரம்பூர்: கொடுங்கையூர் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு கடந்த 16ம் தேதி மாலை, சுமார் 10 பேர் கொண்ட கும்பர் வந்து, கடையை நடத்தக்கூடாது, உடனடியாக பாரை மூடுங்கள், என்று தகராறில் ஈடுபட்டனர். பின்னர், அங்கிருந்தவர்களை மிரட்டி விட்டு சென்றனர். இதுகுறித்து டாஸ்மாக் கடை மாவட்ட மேலாளர் செந்தில்குமார் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார், இதுகுறித்து விசாரித்தனர். அதில், இந்த பாருக்கான ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி அன்று முடிவடைந்த நிலையில், புதிய ஒப்பந்தம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, புதிய பார் நியமனம் செய்யப்பட்டுள்ளது. முறையான அனுமதியுடன் செயல்பட்டு வந்த நிலையில், ஏற்கனவே இந்த பாரை எடுத்து நடத்தியவர்கள் சிலர் குறிப்பிட்ட அந்த கடைக்கு வந்து பாரை நடத்தக் கூடாது என்று மிரட்டி சென்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக, கோயம்பேடு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த அன்புச்செல்வன் (45) என்பவரை நேற்று கைது செய்தனர். இவர், பார் உரிமையாளர் சங்க தலைவராக இருப்பது தெரிந்தது. இவரது தூண்டுதலின் பேரில் டாஸ்மாக் கடையில் தகராறு செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அன்புச்செல்வன் மீது அரசு பணியினை செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
மாநில அளவிலான வனத்தீ மேலாண்மை குறித்த கருத்துப் பட்டறை
அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம் விளக்கு பகுதி காவலர் குடியிருப்புக்கு ஆபத்து?.. சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் பரபரப்பு
ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஓபிசி கிரீமிலேயர் வரம்பு போதுமானது என்பதா?: ரூ.15 லட்சமாக உயர்த்த ராமதாஸ் வலியுறுத்தல்..!!
பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் நிலைய 2ம் கட்ட பணி; வாகன பார்க்கிங் அமைக்க கடைகளை அகற்ற முடிவு: வியாபாரிகள் எதிர்ப்பு
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு துணைத்தலைவர், உறுப்பினர்களை நியமிக்க ஒன்றிய அரசுக்கு அன்புமணி கோரிக்கை!!
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிப்.24, 25 தேதிகளில் பிரச்சாரம் செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!