பிரான்ஸ் விமானப்படை விமானம் சென்னையில் தரையிறங்கியது
2022-09-19@ 00:15:52

சென்னை: பிரான்ஸ் நாட்டு விமானப் படையின் பிரமாண்டமான, ‘ஏ 400 எம் அட்லஸ்’ விமானம், சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கி, எரிபொருளை நிரப்பிக் கொண்டு அபுதாபிக்கு புறப்பட்டு சென்றது. ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ 400 எம் அட்லஸ் என்ற வகையைச் சேர்ந்த இந்த விமானம், பிரான்ஸ் ராணுவத்துக்காக வடிவமைக்கப்பட்டது.
மணிக்கு 880 கி.மீ., வேகம் செல்லக் கூடிய இந்த போர் விமானம், வானிலேயே பறந்தபடி, மற்றொரு விமானத்துக்கு எரிபொருள் நிரப்பும் வசதி கொண்டது. முறையான ஓடுபாதை இல்லாத இடத்திலும் கூட, இந்த விமானத்தை எளிதாக தரையிறக்க முடியும். இதில் போருக்கு தேவையான கனரக ஹெலிகாப்டர், போர் வாகனங்களை எடுத்துச் செல்லலாம்.
இதேபோல, பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளிலும் பயன்படுத்தப்படுத்தலாம். பிரான்ஸ் விமானப்படை போர் விமானம், கடந்த 16ம் தேதி பிற்பகலில், சிங்கப்பூரில் இருந்து, அபுதாபி நோக்கி சென்றது. விமானத்துக்கு எரிபொருள் நிரப்புவதற்காக, பிற்பகல் 2:20 மணிக்கு, சென்னை விமானநிலை யத்தில் தரையிறங்கியது. எரிபொருள் நிரப்பிய பின், மாலை 5 மணியளவில், அபுதாபிக்கு புறப்பட்டுச் சென்றதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் டிவிட்டரில் நேற்று மாலை பதிவிட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
உயிர் நீத்த காவல் துறையினருக்கு இறுதி மரியாதை தொடர்பாக அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை.!
வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் இன்று வழங்கப்படும் என அறிவிப்பு: உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து இபிஎஸ் அணி நடவடிக்கை!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கன மழை காரணமாக நெற்பயிர் பாதித்த உழவர்களுக்கு உரிய இழப்பீடு அன்புமணி வலியுறுத்தல்
அண்ணா நினைவுநாளையொட்டி இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை
4 லட்சம் பேர் எழுதுகின்றனர் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடங்கியது: சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!