எடப்பாடி பழனிச்சாமி சம்பந்தி சந்திரகாந்த் ராமலிங்கம் மீது கர்நாடக லோக் ஆயுக்தா போலீஸ் வழக்குப்பதிவு
2022-09-18@ 12:12:28

கர்நாடகா: கட்டுமான ஒப்பந்தரரரும், எடப்பாடி பழனிச்சாமி சம்பந்தியுமான சந்திரகாந்த் ராமலிங்கம் மீது கர்நாடக லோக் ஆயுக்தா போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீதான ஊழல் வழக்கில் சந்திரகாந்த் ராமலிங்கமும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர். பெங்களூரு பெருநகர வளர்ச்சி குழுமத்தின் கீழ் புதிததாக குடியிருப்பு கட்டடுவதற்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு செய்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. பெங்களூரு பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் தலைவராக இருந்த ஜி.சி.பிரகாஷ் மூலம் 12 கோடி ரூபாய் லஞ்சத்தை ராமலிங்கம் கொடுத்ததாக புகார்கள் எழுந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி சம்பந்தி தொடர்புடைய 7 போலி நிறுவனங்கள் மூலம் லஞ்சம் பணம் கைமாறியுள்ளதாகவும் குற்றசாட்டு வைத்துள்ளனர். லஞ்சம் பணம் எடியூரப்பா மகனும், பாஜக மாநில துணை தலைவருமான விஜயேந்திராவுக்கு சென்று சேராதது தொடர்பான உரையாடல் வெளியானது. ஏற்கனவே முடிந்த ஒப்பந்த பணிகளுக்கான தொகையை வழங்க மேலும் ரூ.12.5 கோடி லஞ்சம் பேரம் பேசப்பட்டதாகவும் புகார் குவிந்துள்ளது. லஞ்சம் பேரம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி சம்பந்தி ராமணலிங்கமும், எடியூரப்பாவின் பேரன் சசிதரன் பேசிய தொலைபேசி உரையாடலும் வெளியானது. தொலைபேசி உரையாடல் ஏற்கனவே தரப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடகத்தில் முக்கிய அரசு ஒப்பந்ததரராக உள்ள ராமலிங்கம் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளது என்று கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசுப்பணி ஒப்பந்தங்கள் விதிகளை மீறி ராமலிங்கத்துக்கு வழங்கப்பட்டதாக ஏற்கனவே புகார்கள் உள்ளது. தற்போது ரூ.12 கோடி லஞ்சம் கொடுத்தாக கர்நாடக லோக் ஆயுக்தா வழக்குப்பதிவு செய்திருப்பதால் ராமலிங்கத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கட்டுமான ஒப்பந்தரரரும், எடப்பாடி பழனிச்சாமி சம்பந்தியுமான சந்திரகாந்த் ராமலிங்கம் மீது கர்நாடக லோக் ஆயுக்தா போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஏர்டியூரப்பா மீதான ஊழல் வழக்கில் சந்திரகாந்த் ராமலிங்கம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். 666.62 கோடி ரூபாய் ஒப்பந்தம் வழங்க 12 லஞ்சம் கைமாறியதாக கர்நாடக லோக் ஆயுக்தா போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags:
எடப்பாடி பழனிச்சாமி சம்பந்தி சந்திரகாந்த் ராமலிங்கம் கர்நாடக லோக் ஆயுக்தா போலீஸ் வழக்குப்பதிவுமேலும் செய்திகள்
திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய சிக்கல்: ரூ.1.14 கோடி அபராதம் விதித்தது ரிசர்வ் வங்கி
தனது வீட்டை தாக்கிய பழங்குடி வகுப்பினர் மீது நடவடிக்கை வேண்டாம்: எடியூரப்பா பேட்டி
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது ஐகோர்ட்
ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள பூங்காவில் விடப்பட்ட சிவிங்கிப்புலி உயிரிழப்பு
டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு இல்லத்தை ஏப்ரல் 22ம் தேதிக்குள் காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்..!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்