திருவொற்றியூர் ராஜாஜி நகரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை
2022-09-18@ 00:34:57

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், 7வது வார்டுக்கு உட்பட்ட கார்கில் நகர், வெற்றி நகர் மற்றும் ராஜாஜி நகர் பகுதியில் பக்கிங்காம் கால்வாய் ஓரம், உயர் அழுத்த மின் கம்பி செல்லும் பாதைக்கு கீழே நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பலர் வீடு மற்றும் கடைகளை கட்டி உள்ளனர்.
இந்நிலையில், ராஜாஜி நகர் பகுதியில் அரசு நிலத்தில் தனியார் ஒருவர் ஆக்கிரமித்து கட்டிய 10 கடைகளுக்கு கடந்த ஆண்டு மாநகராட்சி அதிகாரிள் சீல் வைத்தனர். இந்த கடைகளை இடிக்க திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் திட்டமிட்டனர். அதன்படி நேற்று காலை மண்டல உதவி செயற்பொறியாளர் பாபு தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் ராஜாஜி நகர் பகுதிக்கு வந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் 10 கடைகளையும் இடித்து அகற்றினர்.
மேலும் செய்திகள்
உள்வாடகைக்கு விட்டதால் ரூ.20 கோடி மதிப்பு கோயில் கடைக்கு சீல்
கருத்துரிமையை பறிக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ரவுடிகள் செல்போனை பறித்ததால் 4 கார் கண்ணாடிகளை உடைத்த போதை ஆசாமி: பொதுமக்கள் அடித்து உதைத்தனர்
பர்னிச்சர் குடோனில் தீ விபத்து: 4 மணி நேரம் போராடி அணைப்பு
தனியார் பேருந்து மோதி இந்திரா காந்தி சிலை உடைந்ததால் பரபரப்பு
சொத்துவரி கட்டாத 6 கடைகளுக்கு சீல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!