டி20 உலக கோப்பை; பாகிஸ்தானுடன் மோதும் இந்திய லெவன் அணி
2022-09-17@ 14:24:32

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் வரும் அக்டோபர் 23ம் தேதி மெல்போர்னில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கும் மோதலாக இந்தியா - பாகிஸ்தான் போட்டிதான் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை மாஜி வீரர் இர்பான் பதான் தேர்வு செய்துள்ளார். ரோஹித், ராகுல், கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகிய நட்சத்திர வீரர்களை தேர்வு செய்துள்ள இர்பான் பதான், தீபக் ஹூடாவை சேர்த்துள்ளார்.
விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கையும், ஆஸ்திரேலிய பிட்சுகள் பெரிதாக ஸ்பின் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்காது என்பதால் யஸ்வேந்திர சாஹலை மட்டும் தேர்வு செய்துள்ளார். வேகப்பந்துவீச்சுக்கு புவனேஷ்வர்குமார், பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார். இவர்களுடன் ஹர்திக் பாண்டியாவும் பந்துவீசுவார். பாகிஸ்தானுக்கு எதிரான இர்பான் பதான் தேர்வு செய்த இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல்.
மேலும் செய்திகள்
குண்டுவெடிக்கும் பாகிஸ்தானில் எப்படி போட்டி நடத்த முடியும்?... பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கேள்வி
பாக். வீரர் ஷாகித் அப்ரிடி மகளுடன் ஷாகின்ஷா அப்ரிடி திருமணம்
டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக ஆடி உள்ளார்; இந்திய அணியின் முதுகெலும்பு ஸ்ரேயாஸ் அய்யர்தான்: அஸ்வின் சொல்கிறார்
சில்லி பாயின்ட்...
தாய்லாந்து ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறினார் வாங் ஸின்யு
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் கர்நாடகா
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!