நெருங்கும் தீபாவளி பண்டிகை!: தொடர் சரிவை காணும் நகை விலை..சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.37,120க்கு விற்பனை.. நகைப்பிரியர்கள் உற்சாகம்..!!
2022-09-17@ 11:33:30

சென்னை: தங்கத்தின் விலை இன்று எதிர்பாராத வகையில் அதிரடியாக சரிவை கண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.37,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.4,640க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து ரூ.62.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம்.
இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த நிலையில் கடந்த வாரம் சற்று ஏற்றுத்துடன் விற்பனையானது. அதாவது, சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.37,888-க்கும், கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.4,736-க்கும் விற்பனையானது. அதன் பின் தங்கத்தின் விலை இறங்குமுகமாகவே விற்பனையானது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக கடந்த வாரம் எதிர்பார்க்காத வகையில் தங்கத்தின் விலை திடீர் குறைவை கண்டு விற்பனை செய்யப்பட்டது. அதாவது சவரன் ரூ.224 குறைந்து ரூ.37,920-க்கும், கிராமுக்கு ரூ.28 குறைந்து ரூ.4,740-க்கும் விற்கப்பட்டது. இதனால் நகை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அதுமட்டுமின்றி இவ்வாரத்தின் முதல் 2 தினங்களில் தங்கத்தின் விலை இறங்குமுகமாகவே விற்பனை செய்யப்பட்டது.
குறிப்பாக நேற்றைய தினம் தங்கத்தின் விலை சவரன் ரூ. 432 குறைந்து ரூ.37,008-க்கும், கிராமுக்கு ரூ.54 குறைந்து ரூ.4,626-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் மக்களை மேலும் மகிழ்விக்கும் வகையில் தங்கத்தின் விலை மீண்டும் சரிந்துள்ளது. அதாவது 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.37,120-க்கும், கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.4,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து ரூ.62.00-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி போன்ற பண்டிகை காலம் நெருங்கும் வேளையில் தங்கத்தின் விலை தொடர் சரிவை கண்டு வருவது இல்லத்தரசிகள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
நாடு முழுவதும் 16.73 லட்சம் மின்சார வாகனங்கள் ஓடுது: ஒன்றிய அமைச்சர் தகவல்
வங்கிகளுக்கு ஆர்பிஐ அளிக்கும் குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ 6.25%ல் இருந்து 6.50% ஆக உயர்வு!!
43 ஆயிரத்தை கடந்தது நகை விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.43,064க்கு விற்பனை..!!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.43 ஆயிரத்தை நெருங்கியது
தொடர்ந்து உயரும் நகை விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.64 அதிகரித்து ரூ.42,984-க்கு விற்பனை..!!
ஏறுமுகத்தில் நகை விலை!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.42,920க்கு விற்பனை.. இல்லத்தரசிகள் கவலை..!!
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!