தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்: ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வரவேற்பு
2022-09-17@ 02:40:26

சென்னை: தமிழக அரசின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்துக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கை: முன்னாள் முதல்வர் காமராஜர், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தினார். பின்னர் இந்த திட்டம் சத்துணவு திட்டமாகவும் அதைத் தொடர்ந்து, வாரத்தில் 5 நாளும் முட்டை வழங்கும் திட்டமாக 10ம் வகுப்பு மாணவர்கள் வரை விரிவு படுத்தப்பட்டது.
காலை உணவை தவிர்க்கக் கூடாது என்று மருத்துவர்களும்,மருத்துவத் துறையும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், பள்ளி மாணவர்கள் காலை உணவை தவிர்த்தால் உடல் நலம், மன நலம் முற்றிலும் பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அணணா பிறந்த நாளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் வரலாற்று சிறப்பு மிக்க உன்னத திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதல்வர் பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு சிறப்பான திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்தி வருகிறார்.
தொழில் கல்விபடிக்க அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, அவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் திட்டம், கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு, இல்லம் தேடி கல்வி திட்டம், நான் முதல்வன் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், சிற்பி திட்டம் என நாட்டிலே அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக தனி அக்கறையுடன் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தி வருகிறார். அதற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், தற்போதுள்ள சத்துணவு திட்டததை 1 முதல் பிளஸ் 2 வரை அனைத்து மாணவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும். அதற்கு முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரை சூட்ட வேண்டும். தமிழக முதல்வர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் செய்திகள்
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடம் 4-ல் மின்சாரம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடி மதிப்பில் ஒப்பந்தம்
சென்னை - பெங்களூரு விரைவுச்சாலைக்கு நிலம் எடுப்பில் ரூ.100 கோடி மோசடி..? அதிர்ச்சி தகவல்..!
ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்ககளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
மாணவர்கள் சுய ஒழுக்கத்துடன் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்: கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
மெரினா கடற்கரையில் கலைஞருக்கு நினைவிடம் அமைப்பதில் விதிமீறல் இல்லை: தமிழ்நாடு அரசு பதில்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!