இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடியை தேர்ந்தெடுத்த பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது: ஐகோர்ட்டில் வழக்கு
2022-09-17@ 00:31:59

சென்னை: திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சி முடிவுகளை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என இடைக்கால கோரிக்கை வைத்துள்ளேன். இந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது. ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட (3, 4, 5, 6, 7) தீர்மானங்களை ஏற்கக் கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.
Tags:
Interim General Secretary Edappadi General Assembly resolution not to approve case in ICourt இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பொதுக்குழு தீர்மான அங்கீகரிக்க கூடாது ஐகோர்ட்டில் வழக்குமேலும் செய்திகள்
உள்வாடகைக்கு விட்டதால் ரூ.20 கோடி மதிப்பு கோயில் கடைக்கு சீல்
கருத்துரிமையை பறிக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ரவுடிகள் செல்போனை பறித்ததால் 4 கார் கண்ணாடிகளை உடைத்த போதை ஆசாமி: பொதுமக்கள் அடித்து உதைத்தனர்
பர்னிச்சர் குடோனில் தீ விபத்து: 4 மணி நேரம் போராடி அணைப்பு
தனியார் பேருந்து மோதி இந்திரா காந்தி சிலை உடைந்ததால் பரபரப்பு
சொத்துவரி கட்டாத 6 கடைகளுக்கு சீல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!