கிண்ணக்கொரை சாலையில் காட்டு மாடுகள் நடமாட்டம்
2022-09-16@ 14:37:14

மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள தாய்சோலா, கேரிங்டன், கிண்ணக்கொரை பகுதிகளில் சமீபகாலமாக காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இப்பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு மாடுகள் கூட்டம், கூட்டமாக தேயிலை தோட்டங்களுக்கிடையே மேய்ச்சலில் ஈடுபடுவதால் இலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்துடனேயே பணிக்கு சென்று வருகின்றனர். சமீபத்தில், கேரிங்டன் பகுதி தேயிலை தோட்டத்தில் இலை பறித்து கொண்டிருந்த தொழிலாளர்களை காட்டு மாடு ஒன்று விரட்டியது.
இப்பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக வனப்பகுதிகள், தோட்டங்கள் பசுமைக்கு திரும்பியுள்ளது. சாலையோரங்களிலும் புற்கள் அதிகளவில் வளர்ந்து செழிப்பாக காணப்படுவதால் தற்போது காட்டு மாடுகள் மேய்ச்சலில் ஈடுபட சாலைகளில் நடமாடி வருகிறது. குறிப்பாக, கேரிங்டன் முதல் கிண்ணக்கொரை தணயகண்டி பகுதிவரை சாலை அடர்ந்த வனப்பகுதியில் நடுவே அமைந்துள்ளதால் இச்சாலையில் பகல் நேரங்களிலேயே காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
சாலையில் ஆங்காங்கே மேய்சலில் ஈடுபட்டும், ஓய்வெடுத்த நிலையில் காட்டு மாடுகள் காணப்படுவதால் இவ்வழியாக வாகனங்களில் குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் எச்சரிக்கையுடனும், காட்டு மாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் பயணிக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் செய்திகள்
வாணியம்படி அருகே தேசிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர்: நடவடிக்கைக்கு பொதுமக்கள் கோரிக்கை
திருப்பத்தூர் அருகே ரூ.11 கோடியில் ஜவ்வாதுமலை-புதூர்நாடு சாலை பணி: மார்ச் இறுதிக்குள் முடியும் என கோட்ட பொறியாளர் தகவல்
சேலம்-நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசுவாமி கோயிலில் நாளை தைப்பூசத்திருவிழா தேரோட்டம்
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எதிரொலி: தொப்பூர் கணவாயில் விபத்து உயிரிழப்பு குறைந்தது
ஈரோட்டில் ஆதியோகி ரத யாத்திரை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம்
விடாமல் தொடரும் கனமழை: தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!