SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டி.20 உலக கோப்பை தொடருக்கான வெஸ்ட்இண்டீஸ் அணி அறிவிப்பு: வீரர்கள் காயத்தால் அவகாசம் கேட்கும் பாகிஸ்தான்

2022-09-15@ 18:51:26

ஆன்டிகுவா :  7வது ஐசிசி டி.20 உலக கோப்பை அக்டோபர் 16ம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். மற்ற 4 அணிகள் தகுதி சுற்று மூலமாக தேர்வாகும். உலக கோப்பை டி.20 தொடருக்கான அணி வீரர்கள் பட்டியலை இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்ரிக்கா, வங்கதேசம், நமீபியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன.

அணியை அறிவிக்க இன்று கடைசி நாள் ஆகும். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. நிகோலஸ் பூரன் தலைமையிலான அணியில் எவின் லூயிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டு நடந்த டி.20 உலக கோப்பையில் ஆடினார். பின்னர் உடற்தகுதி காரணமாக அணியில் சேர்க்கப்படவில்லை. தற்போது மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். அணி விபரம்: நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ரோவ்மன் பவல் (துணை கேப்டன்),

யானிக் கரியா, ஜான்சன் சார்லஸ், ஷெல்டன் காட்ரெல், ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கைல் மேயர்ஸ், ரா ஓபிட் மெக்காய்ஸ், ரெய்ஃபர், ஒடியன் ஸ்மித். பாகிஸ்தான் அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இன்றுடன் காலக்கெடு முடிவடையும் நிலையில் சில நாட்கள் அவகாரம் கேட்க முடிவு செய்துள்ளது. முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி இன்னும் உடற்தகுதி பெறாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முகமது ரிஸ்வான், ஷதாப் கான் மற்றும் ஷாநவாஸ் தஹானி ஆகியோரும் காயத்தில் சிக்கி உள்ளனர். அவர்களின் உடற்தகுதிக்காக காத்திருக்கின்றனர். இதேபோல் டெஸ்ட் விளையாடும் நாடுகளில், இலங்கை, ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-dmk-votes-2

  அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

 • scotland-bonfire-festival

  ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்