வளர்ச்சி பணிகளில் முனைப்புடன் செயல்பட்டு வரும் கொரடாச்சேரி பேரூராட்சி
2022-09-15@ 12:10:58

நீடாமங்கலம்: கொரடாச்சேரி பேரூராட்சி நிர்வாகம் வளர்ச்சிப் பணிகளில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி முதல்நிலை பேரூராட்சியில் 2021-2022க்கான வளர்ச்சிப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கொரடாச்சேரி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் கொரடாச்சேரி பேரூராட்சி பேரூராட்சி 2வது வார்டு காமராசர் சாலை அவ்வை நகரில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.14.65 லட்சம் மதிப்பில் அங்காடி கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தில் கொரடாச்சேரி பேரூராட்சி பேரூராட்சியில் ரூ.34.10 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற உள்ளது. அதே போன்று நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் கொரடாச்சேரி பேரூராட்சி பேரூராட்சியில் ரூ.5.75 லட்சத்தில் பணிகள் தொடங்க உள்ளது. அதேபோன்று இங்குள்ள கொரடாச்சேரி பேரூராட்சி 11வது வார்டு காந்தி காலனியிலும் கொரடாச்சேரி பேரூராட்சி 13வது வார்டு தெற்குமாங்குடியில் 15வது நிதிக்குழு மானியத் திட்டத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய பொது சுகாதார வளாகம் கட்டி பராமரிப்பு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. அதேபோன்று கொரடாச்சேரி பேரூராட்சி வடக்கு மாங்குடியில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் கொரடாச்சேரி பேரூராட்சி பேரூராட்சி 5வது வார்டில் ரூ.10 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா கட்டும் பணி நடந்து முடிந்துள்ளது.
அதேபோன்று கொரடாச்சேரி பேரூராட்சி 5வது வார்டில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் கொரடாச்சேரி பேருந்து நிலையத்தில் சைக்கிள் பாதுகாப்பகம் மற்றும் கழிவறை பராமரிப்பு பணி ரூ.15 லட்சம் மதிப்பில் தொடங்க உள்ளது. அதேபோன்று 15வது நிதிக்குழு திட்டத்தில் பேரூராட்சி 13வது வார்டு கம்பன் கொல்லை காலனியில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய பொது சுகாதார வளாகம் கட்டும் பணி தொடங்க உள்ளது.
அதேபோன்று 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் பேரூராட்சி இரண்டாவது வார்டு சிவன்கோயில் தெருவில் ரூ.8லட்சம் மதிப்பில் குடிநீர் மேல்தேக்க தொட்டி பராமரிப்பு பணி தொடங்க உள்ளது. கொரடாச்சேரி முதல்நிலை பேரூராட்சி திடக்கழிவு மேலாண் பணியாளர்கள், மகளிர் குழுக்கள், தூய்மைப் பணியாளர்கள் பேரூராட்சி எல்லைப் பகுதிகளில் உள்ள வீடுகளில் வீடு, வீடாக சென்று சேகரிக்கப்பட்ட குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை செய்கின்றனர்.
மேலும் தமிழக அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்தின்கீழ் மீண்டும் மஞ்சள் பை என்ற மகத்தான திட்டத்தை முனைப்புடன் அமல்படுத்தும் வகையில் பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பை விற்பனையை முனைப்புடன் தடுக்கும் பணிகள் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கொரடாச்சேரி முதல்நிலை பேரூராட்சி பகுதிகளில் உள்ள 15 வார்டுகளிலும் அடிப்படை வசதியோடு பல்வேறு நலத் திட்டப்பணிகள் தொடங்கப்பட உள்ளது.
கொரடாச்சேரி பேரூராட்சி மாவட்டத்தில் முதன்மை பேரூராட்சியாக கொண்டுவர பேரூராட்சி செயல்அலுவலர் நாராயணமூர்த்தி, பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி செல்வகுமார், துணைத் தலைவர் தளபதி மற்றும் அலுவலர்கள், தூய்மை பணி மேற்பார்வையாளர், துப்புரவு பணியாளர்கள் ஒற்றுமையோடு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். பேரூராட்சி பகுதிகளில் நடைபெறும் பணிகளை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட் மோடி அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: பாலகிருஷ்ணன் பேட்டி
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு ஓடும் ரயிலில் பாய்ந்து பள்ளி மாணவியுடன் கல்லூரி மாணவர் தற்கொலை
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்
மேலவளவு முருகேசன் கொலை வழக்கு!: 13 பேரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்யகோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 4-ம் வேட்புமனு தாக்கல் நிறைவு: ஒரே நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல்
திருமழிசையில் மண்புழு உரம் தயார் செய்யும் பணி
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!