முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று நரிக்குறவர், குருவிக்காரர்கள் பழங்குடி பட்டியலில் சேர்ப்பு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
2022-09-15@ 00:08:11

புதுடெல்லி: தமிழகத்தில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகத்தினரின் மேம்பாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிக அக்கறை செலுத்தி வருகிறார். இவர்களின் கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் அவர், சமீபத்தில் நரிக்குறவர்களின் வீடுகளுக்கு சென்று உணவு அருந்தினார். அந்த பிரிவை சேர்ந்த மாணவ, மாணவிகளை சந்தித்து பேசினார்.
இதனால், அவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும்படி ஒன்றிய அரசுக்கு கடந்த மார்ச்சில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், தமிழகத்தில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம், இவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும்படி கடந்த 1965 முதல் வைக்கப்பட்ட கோரிக்கை, தற்போதுதான் நிறைவேறி உள்ளது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஒன்றிய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா கூறுகையில், ‘சட்டீஸ்கரில் 12 சமுதாயங்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இமாச்சல பிரதேசத்தின் ஹட்டி சமுதாயத்தினரை இப்பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று 15 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், கர்நாடகாவில் பெட்டா குருபா இனத்தினரையும் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது,’’ என்றார். ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்து விட்டதை தொடர்ந்து, இந்த பிரிவினர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான தீர்மானத்தை அந்தந்த மாநிலங்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றி, இதை அமல்படுத்தலாம்.
Tags:
Chief Minister M.K.Stalin demand foxes sparrows tribal list. Union Cabinet approval முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை நரிக்குறவர் குருவிக்காரர்கள் பழங்குடி பட்டியல் . ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்மேலும் செய்திகள்
முதல் கணவர் மரணம், 2வது கணவருடன் வாழ பிடிக்கவில்லை; 70 வயது மாமனாரை கல்யாணம் செய்து கொண்ட 28 வயது பெண்
டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தின் பெயரை அம்ரித் உதயான் என மாற்றியது ஒன்றிய அரசு: காங்கிரஸ் கட்சி கண்டனம்
31ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்; கிழக்கு லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு?.. கூட்டத் தொடரில் குரல் எழுப்ப காங். முடிவு
பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவர்களுக்கு வாந்தி, குமட்டல்
55 பயணிகளை விட்டுவிட்டு சென்ற விமான நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்
பீகாரில் சிலை கரைப்பு ஊர்வலத்தில் வாலிபர் சுட்டுக் கொலை
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!