SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அடுத்த 6 வாரங்களில் அரசு பங்களாவை காலி செய்யணும்: சுப்ரமணிய சுவாமிக்கு உத்தரவு

2022-09-15@ 00:07:49

புதுடெல்லி: பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி, கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி முதல் 2022 ஏப்ரல் 24ம் தேதி வரை மாநிலங்களவை எம்பி.யாக இருந்தார். அவருக்கு டெல்லியில் அரசு பங்களா வழங்கப்பட்டது. அவருடைய பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து, குடியிருப்பை காலி செய்யும்படி ஒன்றிய அரசு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், தற்போது வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்வதற்கான அவகாசத்தை நீட்டிக்க உத்தரவிடும்படி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சுப்ரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார். இது நேற்று விசாரணைக்கு வந்தபோது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ‘ஏற்கனவே டெல்லியில் ஒன்றிய இணையமைச்சர்கள், எம்பி.க்கள் பலருக்கு இன்னும் அரசு குடியிருப்பு ஒதுக்கப்படாமல் இருக்கிறது. எனவே, சுப்ரமணிய சுவாமிக்கு அவகாசம் வழங்க முடியாது,’ என தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம், ‘அடுத்த 6 வாரத்திற்குள் தான் வசிக்கும் அரசு பங்களாவை சுப்ரமணிய சுவாமி காலி செய்து, அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்,’ என உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்