ஒன்றிய அரசின் கல்வி உதவி தொகைக்கு அக்.31 வரை விண்ணப்பிக்கலாம்; கல்லூரி கல்வி இயக்குநரகம் தகவல்
2022-09-14@ 18:53:54

சென்னை: ஒன்றிய அரசின் கல்வி உதவி தொகைக்கு கல்லூரி மாணவர்கள் வரும் அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநரகம் அனைத்து அரசுக் கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டம், ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை பெற மாணவர்கள் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தில் முழு நேர கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பகுதிநேர கல்லூரிகள் அல்லது பட்டயப் படிப்புகள் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க கூடாது.
நடப்பாண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற, https://scholarships.gov.in/ என்ற இணையதளத்தில் வரும் அக்.31 ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் கூடுதல் விவரங்களை www.tndce.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். 2022-23 கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் பெயரை மதிப்பெண் பட்டியல், ஆதார் அட்டையில் உள்ளதுபோல் பதிவிட வேண்டும். பெயரில் ஏதேனும் மாற்றம் இருப்பின், ஆதார் அட்டையுடன் வங்கிக் கணக்கு புத்தக நகலையும் இணைத்து அக்.31 ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். இந்த திட்டத்தின்கீழ் இளநிலை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம், முதுநிலை பயில்வோருக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
உள்வாடகைக்கு விட்டதால் ரூ.20 கோடி மதிப்பு கோயில் கடைக்கு சீல்
கருத்துரிமையை பறிக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ரவுடிகள் செல்போனை பறித்ததால் 4 கார் கண்ணாடிகளை உடைத்த போதை ஆசாமி: பொதுமக்கள் அடித்து உதைத்தனர்
பர்னிச்சர் குடோனில் தீ விபத்து: 4 மணி நேரம் போராடி அணைப்பு
தனியார் பேருந்து மோதி இந்திரா காந்தி சிலை உடைந்ததால் பரபரப்பு
சொத்துவரி கட்டாத 6 கடைகளுக்கு சீல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!