சென்னை விமான நிலையத்தில் 12 பழைய விமானங்களை அகற்றும் பணிகள் தொடக்கம்
2022-09-14@ 14:51:32

சென்னை : சென்னை விமான நிலையத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள செயல்பாட்டில் இல்லாத விமான நிறுவனங்களை சேர்ந்த 12 பழைய விமானங்கள் அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன. சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் வருகின்ற நிலையில் போதுமான இட வசதி இல்லாத காரணத்தால் புதிய விமான நிலைய கட்டுமான பணி ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விமான நிலையத்தில் பழைய விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த விமானங்களை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், செயற்பாட்டில் இல்லாத 12 பழைய விமானங்களை கிங் பிஷர், ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் விமானங்கள் சுமார் 10 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருப்பது தெரியவந்தது.
இதனால், அதிகாரிகள் அதில் உள்ள உதிரி பாகங்களை தொழில் நுட்ப வல்லுநர்களைக் கொண்டு தனித்தனியா பிரித்தெடுத்து முழுமையாக அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். செயல்பாட்டில் இல்லாத 12 பழைய விமானங்களில் பறவைகள் கூடுகட்டி மற்ற விமான போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் கூடுதல் விமானங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லாத நிலையில் செயல்பாட்டில் இல்லாத விமானங்களை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டும் இதுபோன்று 5 விமானங்களை அகற்றினர். எனவே,செயற்பாட்டில் இல்லாத விமானத்தின் உதிரி பாகங்கள் மீண்டும் விமானத்தில் பொருத்தக்கூடிய நிலையில் இருப்பதால் தொழில் நுட்ப வல்லுநர்களை கொண்டு தனித்தனியாக பிரிக்கப்பட்டு அதில் உள்ள பாகங்களை அகற்றும் பணியில் உள்ளனர். மேலும், இத்தனை ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாத விமான நிறுவனத்திடம் இதற்கான தொகையும் வசூலிக்க சென்னை விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
சொத்துவரி நிலுவையில் வைத்துள்ள சொத்து உரிமையாளர்கள் சொத்துவரியினை உடனடியாக செலுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
‘சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பு குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற ஆயத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது: காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்
சென்னை செனாய்நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் பொதுமக்களின் அனைத்து குடும்ப சுப நிகழ்ச்சிகள், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி: சென்னை மாநகராட்சி
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடம் 4-ல் மின்சாரம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடி மதிப்பில் ஒப்பந்தம்
சென்னை - பெங்களூரு விரைவுச்சாலைக்கு நிலம் எடுப்பில் ரூ.100 கோடி மோசடி..? அதிர்ச்சி தகவல்..!
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!