அதிமுக ஆட்சியால் வறண்ட வடக்கத்தி அம்மன் குளத்தில் சீரமைப்பு பணிகள்-முழுமைப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
2022-09-14@ 12:57:27

சின்னமனூர் : தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக விவசாயிகளின் நலன்சார்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. விவசாய திட்டம் சார்ந்த பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் கண்டுகொள்ளப்படாமலும், தற்போது கருத்தாக நடந்து வருவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் ஏராளமான நீர் நிலைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாயின. அவற்றை அகற்ற அதிகாரிகள் தவறி விட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பல இடங்கள் வருவாய் ஆவணங்களில் இல்லை. ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்தது. அதன்பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதும், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். நீர் நிலைகள் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டால்தான் வருங்கால சந்ததிகளுக்கு அவை பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்பின் அந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, குடிமராமத்து பணிகள் நடந்து வருகிறது.
போடி அருகே தேவாரம் சாலையில் உள்ள சிலமலை கிராம ஊராட்சி உள்ளது வடக்கத்தி அம்மன்குளம். சுமார் 20 ஏக்கர் அளவில் அகன்ற குளமாக உள்ளது. இக்குளத்தை நம்பி 500க்கும் மேற்பட்ட ஏக்கரளவில் விவசாயம் நடக்கிறது. இந்த குளம் கடந்த அதிமுக ஆட்சியில் போதிய பராமரிப்பின்றி கருவேல மரங்களும் அடர்ந்து வளர்ந்து அலங்கோலமாக மாறியது. மேலும் 7 கிமீக்கு வருகின்ற பாசன கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டதால், மழைநீர் சாலைகளில் குளமாக தேங்கும் அவலம் ஏற்பட்டது. இதுகுறித்து அதிமுக ஆட்சியின்போது பலமுறை மனுயளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் நீர் நிலைகளை காப்பாற்றும் விதமாக ஆக்கிரப்புகளை அகற்றி நான்குபுறம் கரைகளை உயர்த்தி தூர்வாரி நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், வடக்கத்தி அம்மன் குளத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினகரனில் செய்தியும் வெளியானது. அதனைத் தொடர்ந்து இந்த குளத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து ஒரு ஏக்கரளவிலான குளத்தில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
அதுபோல், மீதமுள்ள 19 ஏக்கரில் உள்ள கருவேல மரங்களை அகற்றி முழுமையாக நான்குபுற கரைகளையும் உயர்த்தி மழைநீர் முழுவதும் தேங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். அப்போதுதான், இந்த குளத்தை நம்பி உள்ள 500 ஏக்கர் அளவிலான விவசாயம் காக்கப்படும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழா 100 சேவல், 150 கிடாய் வெட்டி 2500 கிலோ அரிசியில் பிரியாணி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.23.71 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கேரட், பீட்ரூட்டை சமவெளியில் சாகுபடி செய்து மண் காப்போம் இயக்கம் சாதனை!.. விவசாயிகளுக்கு வழிகாட்டும் ஈஷாவின் மாதிரி பண்ணை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் பறக்கும் படையினர் பணப்பட்டுவாடாவை தடுக்க மும்முரம்
தமிழ்நாடு வார்த்தையை பயன்படுத்தி முதல்வரின் உருவம் வரைந்த அரசு கல்லூரி மாணவி: பாராட்டுகள் குவிகிறது
நெல்லை, தூத்துக்குடியில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்: பணியில் ஈடுபட்டுள்ள 200-க்கு மேற்பட்டுள்ள தன்னார்வலர்கள்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!