திருத்தணி அரசினர் கலை கல்லூரியில் அனைத்து பிரிவு காலியிடங்களும் நிரம்பியதால் மாணவர்கள் மறியல்: கூடுதல் இடம் ஒதுக்க கோரிக்கை
2022-09-13@ 03:52:29

சென்னை: திருத்தணி அரசினர் கலை கல்லூரியில் அனைத்து பிரிவு இடங்களும் நிரம்பிவிட்டதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரியில் இந்த ஆண்டு கூடுதல் இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, மேதினிபுரம் பகுதியில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி அரசினர் கலைக் கல்லுாரி இயங்கி வருகிறது. நடப்பு கல்வி ஆண்டுக்கான இளநிலை மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு முதற்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று கலந்தாய்வுக்கு வந்த மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகம் கல்லூரியில் அனைத்து பிரிவுகளில் உள்ள காலியிடங்கள் நிரம்பி விட்டதாக தெரிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நடப்பாண்டில் கல்லூரியில் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்து மாணவர்கள் படிக்க கல்லூரி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
அப்போது போராட்டக்காரர்கள் கூறும்போது, `இந்த ஆண்டு மொத்த மாணவ, மாணவிகள் ஐந்தாயிரம் பேர் இளங்கலை பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் 686 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. பலரும் கிராமப்புறங்களில் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு வெளியூர் சென்று படிக்கின்ற வசதி கிடையாது. எனவே இனி வரும் காலங்களில் மாலை நேரக் கல்லூரி தொடங்கினால் கூடுதலாக மாணவர்களுக்கு இடம் கிடைக்கும். எனவே தமிழக அரசு திருத்தணி மற்றும் சுற்றுப்புற கிராம புற பெற்றோர்களின் கோரிக்கையை அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்’ என்று கூறினர்.
இந்த திடீர் சாலை மறியலால் 4 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவலறிந்து விரைந்து வந்த திருத்தணி ஆர்டிஓ அசரத் பேகம், கல்லூரி முதல்வர் பூரணச்சந்திரன், தாசில்தார் வெண்ணிலா, திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்ட் (பொறுப்பு) குமரவேல், திருத்தணி வருவாய் ஆய்வாளர் யாசர் அராபாத், கிராம நிர்வாக அலுவலர் உமா மகேஸ்வரி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மாணவர்களின் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
பிரபல இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறையில் 1,083 காலியிடங்கள்: தேர்வுக்கு மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கூட்டணி கட்சியின் உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு: பாஜ தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் கடிதம்
அமெரிக்காவில் உயிரிழப்பு, பார்வை பறிபோன விவகாரம் சென்னை கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை: ஒன்றிய அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!