பொதுமக்களிடம் தகராறு தட்டிக்கேட்ட ஓட்டுநரை வெட்டிக் கொல்ல முயற்சி: 7 பேருக்கு வலை
2022-09-13@ 03:49:37

திருவொற்றியூர்: எண்ணூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் தங்கராஜ்(36). லாரி ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் அருகே சென்றபோது பின்னால் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இதில் தலை, உடல் முழுவதும் பலத்த வெட்டு காயமடைந்த தங்கராஜ் ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் குடித்துவிட்டு பொதுமக்களிடம் தகராறு செய்து வந்தது. இதை தங்கராராஜுவின் நண்பர்கள் தட்டி கேட்டுள்ளனர். இவர்களுக்கு தங்கராஜு ஆதரவளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் தங்கராஜியை வீட்டு வாசலில் வெட்டி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இது சம்பந்தமாக தங்கராஜ் அளித்த புகாரின்பேரில் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், முனி, அஜித், தேசப்பன் மற்றும் இவர்களது கூட்டாளிகள் உள்பட 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கல்லூரி மாணவி தீக்குளித்து சாவு: போனில் பேசியவருக்கு வலை
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
மாநில அரசு கோரிக்கை வைத்தால் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்
அரக்கோணம் அருகே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற விஏஓ
புதுவையிலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க உத்தரவு
பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் முழங்க பழநியில் தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலம்: பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!