அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல் நீட் தேர்வில் 35% தேர்ச்சி பெற்றனர்: பள்ளி கல்வித்துறை தகவல்
2022-09-13@ 00:36:02

சென்னை: மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில், தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நடத்தப்படும் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்காக கடந்த ஜூலை 17ம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வில் நாடு முழுவதும் 17 லட்சத்து 64 ஆயிரம் பேர் பங்கேற்றனர். 9 லட்சத்து 93 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியோரில் 67 ஆயிரத்து 787 பேர் தேர்ச்சி பெற்றதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அதில், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் நீட் தேர்வில் எழுதியதில் 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை மூலம் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் 12,840 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை புதிய தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, 17,972 பேர் தேர்வெழுத பதிவு செய்த நிலையில், 12,840 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்; அதில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். நீட் எழுதிய விருதுநகர், விழுப்புரம், நீலகிரி, சேலம், பெரம்பலூர், மதுரை அரசுப்பள்ளி மாணவர்கள் அனைவரும் (100 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய 7 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரும்பாலான மாவட்டங்களில் 20 முதல் 25 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையை பொறுத்தவரை நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்கள் 172 பேரில் 104 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.
Tags:
Government School Students 35% pass in NEET School Education Department அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் 35% தேர்ச்சி பள்ளி கல்வித்துறைமேலும் செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடம் 4-ல் மின்சாரம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடி மதிப்பில் ஒப்பந்தம்
சென்னை - பெங்களூரு விரைவுச்சாலைக்கு நிலம் எடுப்பில் ரூ.100 கோடி மோசடி..? அதிர்ச்சி தகவல்..!
ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்ககளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
மாணவர்கள் சுய ஒழுக்கத்துடன் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்: கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!