ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்துக்கு புதிதாக 48 பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவிப்பு
2022-09-13@ 00:29:12

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்துக்கு புதிதாக 48 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார். தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் சிறப்பாக செயல்படும் வகையில் புதிதாக 48 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு பணியிடங்களுக்கான நிதியும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, ஒரு துணைச் செயலாளர், ஒரு சார்புச் செயலர், ஒரு கணக்கு அலுவலர், இரண்டு பிரிவு அலுவலர், இரண்டு கோர்ட் மாஸ்டர், நான்கு உதவி பிரிவு அலுவலர், நான்கு தனிச்செயலாளர், நான்கு நேர்முக உதவியாளர்கள், இரண்டு எழுத்தர், இரண்டு உதவியாளர், இரண்டு தட்டச்சர், ஒரு பதிவுறு எழுத்தர் ஆகிய பணியிடங்கள் பணி மாறுதல் மூலமும், ஒரு கணிப்பொறி இயக்குபவர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையிலும், மேலும் ஆறு ஓட்டுநர், பதினொரு அலுவலக உதவியாளர், 2 இரவு காவலர் மற்றும் 2 தூய்மை பணியாளர் ஆகிய பணியிடங்கள் பணியாளர் முகமை மூலமாகவும் ஆக மொத்தம் 48 பணியிடங்கள் நிரப்பப்படும். இதற்கான ஆணைய நிர்வாக செலவாக ஆண்டுக்கு ரூபாய் 2.30 கோடி மற்றும் பணியாளர் ஊதியத்திற்கு ரூ.1.80 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Tags:
Adi Dravidar Tribal Commission 48 new posts Minister Kayalvizhi Selvaraj ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணைய புதிதாக 48 பணியிடங்கள் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்மேலும் செய்திகள்
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் 4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்: உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி பதில்
மெரினா கடற்கரையில் ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட விவகாரம்: வீடியோ பதிவு மூலம் 20 மாணவர்களை கைது செய்யும் பணி தொடங்கியது
இந்தியாவிலேயே அதிக மாசுப்பட்ட ஆறு கூவம்: ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குறித்து இன்று மாலை அறிவிப்பு
புரசைவாக்கம் கங்காதரேசுவர் கோயிலில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு
தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!