SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீஞ்சூரில் நாளை பராமரிப்பு பணி லாரி மூலம் அவசர தேவைக்கு நீர் சப்ளை: குடிநீர் வாரியம் தகவல்

2022-09-12@ 01:59:42

சென்னை,: மீஞ்சூரில் அமைந்துள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி அவசர தேவைக்கு லாரி மூலம் குடிநீர் வழக்க வாரியம் திட்டமிட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மீஞ்சூரில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில், பராமரிப்பு பணிகள் நாளை (13ம் தேதி) காலை 6 மணி முதல் வரும் 15ம் தேதி காலை 10 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, மாற்று ஏற்பாடாக மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளுக்கு புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்படும்.

மேலும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம் பகுதி மக்கள் - 8144930901; மணலி பகுதி மக்கள் - 8144930902; மாதவரம் பகுதி மக்கள் - 8144930903; பட்டேல் நகர், வியாசர்பாடி - 8144930904 மற்றும் தலைமை அலுவலகம் (சிந்தாதிரிப்பேட்டை) - 044-2845 1300, 044-4567 4567 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்