ஆசிய கோப்பை பைனலில் இன்று இலங்கை-பாகிஸ்தான் மோதல்: டாஸ் வெல்லும் அணிக்கு அதிக வாய்ப்பு
2022-09-11@ 16:09:53

துபாய்: 15வது ஆசிய கோப்பை டி.20 கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் பாகிஸ்தான்-இலங்கை பலப்பரீட்சை நடத்துகின்றன. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் பேட்டிங்கில் முகமது ரிஸ்வான் சூப்பர் பார்மில் உள்ளார். பஹர் ஜமான், இப்திகர் அகமது ஆகியோரும் வலுசேர்க்கின்றனர். பந்து வீச்சில் ஷதாப் கான், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப் ஆகியோருடன் முகமது நவாஸ் ஆல்ரவுண்டராக மிரட்டுகிறார்.
மறுபுறம் ஷனகா தலைமையிலான இலங்கை, லீக் சுற்றில் தட்டுதடுமாறி வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்த நிலையில், ஆப்கன், இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பேட்டிங்கில் பதும் நிசாங்கா, குசல் மெண்டிஸ், பானுகா ராஜபக்சே, ஷனகாவும், பந்து வீச்சில் ஹசரங்கா, தில்ஷன் மதுஷனகா, தீக்ஷனா, சமிகா கருணாரத்னே அசத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் நடந்த கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்திய உற்சாகத்தில் இலங்கை களம் இறங்குகிறது. இரு அணிகளும் இதுவரை டி.20 போட்டிகளில் 22 முறை மோதி உள்ளன. இதில் பாகிஸ்தான் 13, இலங்கை 9 போட்டிகளில் வென்றுள்ளன. துபாய் பிட்ச்சில் சேசிங் செய்த அணிகளை அதிகம் வெற்றிகளை குவிப்பதால் டாஸ் செல்லும் அணிக்காக அதிக வாய்ப்பு உள்ளது.
மேலும் செய்திகள்
இன்று முதல் டி20 ராஞ்சி களத்தில் இந்தியா-நியூசி
ஆஸி ஓபன் டென்னிஸ் பைனலில் ரைபாகினா சபலென்கா
பள்ளிகளுக்கான வாலிபால் போட்டி: சென்னை பள்ளிகள் சாம்பியன்; அமைச்சர் அன்பில் கோப்பைகளை வழங்கினார்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தமிழ்நாட்டை சுருட்டிய ஜடேஜாக்கள்: சரண்டரான சவுராஷ்டிரா
கலப்பு இரட்டையரில் இறுதி போட்டிக்கு தகுதி; பட்டம் வெல்ல விரும்புகிறேன்: சானியா மிர்சா பேட்டி
கே.எல்.ராகுல் -அதியா ஷெட்டிக்கு டோனி பைக், கோஹ்லி கார் பரிசு: ரூ50 கோடி மதிப்பு அடுக்குமாடி வீடு கொடுத்த மாமனார்
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!!