என் காதல் வாழ்க்கையை சீரழித்தது ஷாருக்கான்: நடிகை ஸ்வரா பாஸ்கர் பகீர்
2022-09-11@ 15:09:32

மும்பை: என் காதல் வாழ்க்கையை கெடுத்தது ஷாருக்கான், ஆதித்யா சோப்ரா ஆகியோர் தான் என்று நடிகை ஸ்வரா பாஸ்கர் தெரிவித்தார். பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் சமீபத்தில் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘எனது காதல் வாழ்க்கையை சீரழித்தது ஆதித்யா சோப்ரா, ஷாருக் கான் ஆகிய இருவரும்தான். ஏனென்றால் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே’ என்ற திரைப்படத்தை சிறுவயதில் பார்த்தேன். அன்றிலிருந்தே ஷாருக் கான் போல் இருக்கும் அந்த மனிதரை தேடினேன். ஆனால் கிடைக்கவில்லை. அதனை உணர பல வருடங்கள் ஆனது. உறவுகளைப் பொறுத்தவரை நான் மிகவும் நல்லவள் என்று சொல்ல முடியாது’ என்றார்.
தொடர்ந்து அவருடன் இருந்த நடிகை பூஜா சோப்ரா கூறுகையில், ‘ஸ்வாரா பாஸ்கர் தனிமையில் இருக்கிறார். அவர் ‘டேட்டிங்’ செல்ல தயாராக இருக்கிறார்’ என்றார். தொடர்ந்து ஸ்வாரா பாஸ்கர் கூறுகையில், ‘இப்போது என்னால் முடியாது. அதற்கான சக்தி என்னிடம் இல்லை. தனியாக வாழ்வது கடினமானது. பங்குதாரர் ஒருவரை ஏற்பது னெ்பது குப்பையை வடிகட்டுவது போன்றது’ என்றார்.
மேலும் செய்திகள்
பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை கண்டித்து 2-வது நாளாக கொச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்: ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு
பிரதமரால் தொழிலதிபர்களை அச்சுறுத்த முடியவில்லையா?: அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்?.. காங். தலைவர் கடும் தாக்கு..!!
திருமணமான சில மாதங்களில் சண்டை கணவர் தாக்கியதில் நடிகையின் முகம் வீங்கியது: நகை, பணத்தை அள்ளிச் சென்றதாக புகார்
ஓடும் பைக்கில் ‘ரொமான்ஸ்’: காதல் ஜோடி மீது போலீஸ் வழக்கு
ரூ38 கோடி மோசடி வழக்கில் தெலுங்கு நடிகர் கைது: ஐதராபாத் போலீஸ் அதிரடி
ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!