காவலர் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை: கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார்
2022-09-11@ 05:51:56

சென்னை: போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுகள் உயர்கல்வி பயில்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் நூற்றாண்டு கல்வி உதவித்தொகை மற்றும் தமிழ்நாடு அரசின் சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் போலீசார் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, உயர் மருத்துவ சிகிச்சை அல்லது மருத்துவ சிகிச்சை பெற்றால் அவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு செலவழித்த தொகை பெற விண்ணப்பித்து, பரிசீலனைக்கு பின்னர் தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து சிகிச்சை பெற்ற காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களுக்கு அத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று வேளச்சேரி, குருநானக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில், சென்னை போலீசார் மற்றும் அமைச்சுப்பணியளார்களின் வாரிசுகளில் 457 மாணவர்களுக்கு 2020-21ம் கல்வி ஆண்டிற்கான நூற்றாண்டு கல்வி உதவித்தொகை ரூ.69.72 லட்சம் மற்றும் 2017, 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற 14 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறப்பு கல்வி உதவித்தொகை ரூ.3,24,760ஐ வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சென்னை காவல் கூடுதல் ஆணையர்கள் லோகநாதன், மகேஸ்வரி, காவல் இணை ஆணையர் (தலைமையிடம்) சாமுண்டீஸ்வரி, காவல் துணை ஆணையர்கள், காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:
Succeeding Constable Scholarship Commissioner Shankar Jiwal காவலர் வாரிசு கல்வி உதவித்தொகை கமிஷனர் சங்கர் ஜிவால்மேலும் செய்திகள்
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு துணைத்தலைவர், உறுப்பினர்களை நியமிக்க ஒன்றிய அரசுக்கு அன்புமணி கோரிக்கை!!
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிப்.24, 25 தேதிகளில் பிரச்சாரம் செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி டானியாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
இரட்டை இலை கிடைத்தால் வென்றுவிடுவார்களா?: ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள் யாருக்கும் ஆதரவு இல்லை.. டிடிவி தினகரன் பேட்டி..!!
கல்வி மிகவும் அவசியம்!: புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வி சேர்க்கை 25% அதிகரித்துள்ளது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!
சென்னை விமான நிலையத்தில் 3 பழைய விமானங்களை அகற்ற உத்தரவு: விமான நிலைய ஆணையம்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!