ஆளுநர் மாளிகை பெயரையும் மாற்ற வேண்டியது தானே...? சசிதரூர் கிண்டல் கேள்வி
2022-09-11@ 05:33:52

புதுடெல்லி: ‘ராஜ்பாத் பெயரை மாற்றியதை போல், ஆளுநர் மாளிகைகளின் பெயர்களையும், மாநிலங்கள் பெயரையும் மாற்ற வேண்டியதுதானே,’ என்று ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் அமைந்திருந்த ‘ராஜ்பாத்’ என்ற ராஜபாதை, பிரமாண்ட முறையில் அழகுப்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், ராஜபாதையின் பெயரை ‘கர்த்தவ்யா பாத்’ (கடமை பாதை) என்றும் ஒன்றிய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. கடமை பாதை திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ‘ராஜ்பாத் என்பது ஆங்கிலேய ஆட்சியின்போது இருந்த அடிமைதனத்தை வெளிப்படுத்துகிறது. எனவேதான், இந்த பெயர் மாற்றப்பட்டுள்ளது,’ என தெரிவித்தார். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ராஜ்பாத் பெயர் கடமை பாதை என மாற்றப்பட்டுள்ளது. இதேபோல், நாட்டில் உள்ள அனைத்து ஆளுநர் மாளிகைகளும் ராஜ்பவன் என்பதை ‘கர்த்தவ்யா பவன்’கள் என மாற்றப்படுமா?. இதேபோல், ராஜஸ்தான் மாநில பெயரையும் ‘கர்த்வ்யாஸ்தான்’ என ஒன்றிய அரசு மாற்ற வேண்டும்,’ என்று கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் செய்திகள்
திருமணமான சில மாதங்களில் சண்டை கணவர் தாக்கியதில் நடிகையின் முகம் வீங்கியது: நகை, பணத்தை அள்ளிச் சென்றதாக புகார்
ஓடும் பைக்கில் ‘ரொமான்ஸ்’: காதல் ஜோடி மீது போலீஸ் வழக்கு
ரூ38 கோடி மோசடி வழக்கில் தெலுங்கு நடிகர் கைது: ஐதராபாத் போலீஸ் அதிரடி
ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார்
பாலிவுட் நட்சத்திர காதல் ஜோடி கியாரா, சித்தார்த் திடீர் திருமணம்
'கட்சிகளிடம் ஒற்றுமையில்லாததால் 2019ல் மீண்டும் பாஜக ஆட்சி': மாநிலங்களவையில் பாஜக அரசை உப்புமாவுடன் ஒப்பிட்டு விமர்சித்த திருச்சி சிவா..!!
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!