பராமரிப்பு பணி துவக்கம்; திருச்சி காவிரி பாலம் இன்றிரவு முதல் மூடல்: டூவீலர்களுக்கு மட்டும் அனுமதி
2022-09-10@ 18:55:33

திருச்சி: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில் செல்லும் வழியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிகள் முடிய 5 மாத காலம் ஆகும். இதனால் பாலத்தில் வாகனங்களின் போக்குவரத்து இன்று (10ம்தேதி) நள்ளிரவு 12 மணி முதல் மாற்று பாதையில் செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல் அண்ணாசிலை வழியாக ஸ்ரீரங்கம் செல்ல காவிரிப் பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஓயாமரி வழியாக (காவிரி தென் கரைசாலை) சென்று இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை (சென்னை திருச்சி திண்டுக்கல் சாலை) பழைய பாலத்தின் வழியாகச் சென்று இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை (காவிரி இடதுகரை சாலை), ரயில்வே மேம்பாலம் வழியாக திருவானைக்கோவில் அடைந்து ஸ்ரீரங்கம் செல்லலாம்.
ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திலிருந்து இடதுபுறம் உள்ள திருவானைக்கோவில் செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலத்தின் வழியாக திருவானைக்கோவில் வந்தடைந்து வலது புறம் திரும்பி ட்ரங்க் சாலை வழியாக ரயில்வே மேம்பாலம் சென்று இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை வழியாக வந்து சென்னை பைபாஸ் சாலை (சென்னை திருச்சி திண்டுக்கல் சாலை) பழைய பாலத்தின் வழியாக வந்து வலதுபுறம் திரும்பி ஓயாமரி வழியாக (காவிரி தென்கரைசாலை) சத்திரம் பேருந்து நிலையம் செல்லலாம். திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வாகனங்கள் நகர வழி போக்குவரத்தைத் தவிர்த்து புறவழிச்சாலை வழியாக சஞ்சீவிநகர் மார்க்கமாக காவிரி புதுப்பாலம் வழியாக நெ.1. டோல்கேட் அடைந்து சென்னை செல்லலாம்.
சென்னையிலிருந்து திருச்சி வரும் வாகனங்கள் நெ.1.டோல்கேட் அடைந்து காவிரி புதுப்பாலம் வழியாக வந்து புறவழிச்சாலை மார்க்கமாக திருச்சி அடையலாம்.
சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் புறநகர் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அண்ணா சிலை வழியாக காவிரி பாலத்திற்கு முன்னதாக உள்ள ஓயாமரி வழியாக சென்று இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை காவிரி பழைய பாலத்தில் சென்று நெ.1.டோல்கேட் செல்லும் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின்கட்டண முறை விரைவில் நடைமுறைக்கு வரும்: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
குளித்தலை கடம்பனேஸ்வரர் கோயிலில் தைப்பூச திருவிழா 8 ஊர் சாமிகள் தீர்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
கல்லூரி மாணவி தீக்குளித்து சாவு: போனில் பேசியவருக்கு வலை
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
மாநில அரசு கோரிக்கை வைத்தால் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்
அரக்கோணம் அருகே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற விஏஓ
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!