காக்ரா - ஹாட் ஸ்பிரிங்கில் இருந்து இந்திய, சீன படைகள் 12ம் தேதிக்குள் வாபஸ்: வெளியுறவு அமைச்சகம் தகவல்
2022-09-10@ 02:09:35

புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் காக்ரா - ஹாட் ஸ்பிரிங்கில் இருந்து 12ம் தேதிக்குள் இந்திய, சீன ராணுவம் திருப்பப் பெறப்படும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. கிழக்கு லடாக்கில் சீனாவின் ராணுவம் ஊடுருவியதால் கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட போர் பதற்றத்தை தணிப்பதற்காக, இருநாட்டு ராணுவமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. கடந்த ஜூலையில் நடந்த 16ம் கட்ட பேச்சுவார்த்தையின்போது, காக்ரா-ஹாட் ஸ்பிரிங் பகுதிகளில் இருந்து ராணுவத்தை திரும்ப பெறுவதற்கு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, இந்த பகுதிகளில் இருந்து இருநாட்டு ராணுவமும் நேற்று முன்தினம் மாலை முதல் திரும்ப பெறப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வரும் 12ம் தேதிக்குள் காக்ரா - ஹாட் ஸ்பிரிங் ரோந்து பகுதியில் இருந்து இந்திய, சீன படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவடையும். இரு நாடுகளும் பேச்சுவார்த்தையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவும், எஞ்சியுள்ள பிரச்னைகளை தீர்க்கவும், எல்லையில் அமைதியை நிலைநாட்டவும் இந்தியாவும், சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன,’ என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பெங்களுருவில் இந்திய எரிசக்தி வாரத்தை பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: கடைசி போட்டியை நேரில் காண இருக்கும் பிரதமர் மோடி..?
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அதிமுக பொதுக்குழு கூட்டப்படும்: டெல்லியில் சி.வி.சண்முகம் பேட்டி
சுப்ரீம் கோர்ட் அமர்வில் சிங்கப்பூர் தலைமை நீதிபதி
பிபிசி ஆவணப்படம் விவகாரம் ஒன்றிய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
ஒபிஎஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம்: அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!