இலங்கை கடற்படைக்கு எதிரான வழக்கை விசாரிக்க முடியுமா?: உச்ச நீதிமன்றம் கேள்வி
2022-09-10@ 01:51:50

புதுடெல்லி: இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை கடற்படைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் கே.கே ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடிவிக்கபட்டார்களா?’ என நீதிபதி கேட்டார். அதற்கு, ‘86 மீனவர்கள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. தமிழக மீனவர்களை இந்திய கடல் எல்லைக்குள் வந்து இலங்கை கடற்படை தாக்கி கைது செய்கிறது. எனவே, இதற்கு தீர்வு காண வேண்டும்,’ என மனுதாரரின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதை கேட்ட நீதிபதிகள், ‘இலங்கை கடற்படை விவகாரம் நீதிமன்ற விசாரணை வரம்புக்குள் வருமா?’ என கேட்டனர். ‘இந்திய கடல் எல்லைக்குள் இந்த சம்பவங்கள் நடப்பதால் உச்ச நீதிமன்றம் இதில் தலையிட முடியும்,’ என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. அப்போது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்த வழக்கில் உரிய தரவுகளுடன் பதிலளிக்க வேண்டியுள்ளது. எனவே, அது தொடர்பாக உரிய அமைப்பை கேட்டு தெரிவிக்கிறோம்,’ என கூறினர். இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
மேலும் செய்திகள்
பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை கண்டித்து 2-வது நாளாக கொச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்: ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு
பிரதமரால் தொழிலதிபர்களை அச்சுறுத்த முடியவில்லையா?: அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்?.. காங். தலைவர் கடும் தாக்கு..!!
திருமணமான சில மாதங்களில் சண்டை கணவர் தாக்கியதில் நடிகையின் முகம் வீங்கியது: நகை, பணத்தை அள்ளிச் சென்றதாக புகார்
ஓடும் பைக்கில் ‘ரொமான்ஸ்’: காதல் ஜோடி மீது போலீஸ் வழக்கு
ரூ38 கோடி மோசடி வழக்கில் தெலுங்கு நடிகர் கைது: ஐதராபாத் போலீஸ் அதிரடி
ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!