முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு விரைவில் சிலை; முதல்வருக்கு இளைஞர்கள் சங்கம் கோரிக்கை
2022-09-10@ 01:50:14

சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு விரைவில் முழு உருவ சிலை அமைக்க வேண்டும் என்று முதல்வருக்கு தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் மாநில தலைவர் மதன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன் வெளியிட்ட அறிக்கை: முன்னாள் ஜனாதிபதியும், இளைஞர்களின் நாயகனுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் திருவுருவ சிலை சென்னையில் அமைக்க வேண்டும் என்று 5 வருட காலமாக போராடி வருகிறோம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடத்தில் கோரிக்கை வைத்த போது உடனடியாக நிறைவேற்றி சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக தமிழக முதல்வருக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பிறந்தநாள் விழா அக்டோபர் 15ம் தேதி நடைபெற உள்ளது. அதற்குள் ஒரு அடிக்கல் நாட்டு விழாவாக நடந்தால் கூட நன்றாக இருக்கும் என்பதை தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
புரசைவாக்கம் கங்காதரேசுவர் கோயிலில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு
தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில்: அதானி குழும நிறுவங்களின் பங்குகள் விலை வீழ்ச்சி
2023 ஜனவரி மாதத்தில் 66.07 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம்: டிசம்பர் மாதத்தை விட ஜனவரி மாதத்தில் 1.48 லட்சம் பயணிகள் அதிகம்
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைக்க ரயில் மூலமாக வேலூர் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மாநகர பேருந்தை நடத்துனர்கள் இயக்கக் கூடாது: சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாளர் சுற்றறிக்கை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!