திருப்பதி மலைப்பாதையில் 27 முதல் மின்சார பேருந்து
2022-09-10@ 01:45:41

திருமலை: திருப்பதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், எரிபொருள் செலவை மிச்சப்படுத்தவும் திருப்பதி- திருமலை மலைப்பாதையில் மின்சார பேருந்து இயக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியை முதல்வர் ஜெகன் மோகன் அளித்ததை தொடர்ந்து, ஓலெக்ர்டா நிறுவனத்தின் தயாரிப்பான புதிய மாடல் எலெக்ட்ரிக் பேருந்து இன்று காலை திருப்பதிக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த பேருந்துகளை இயக்கும் நிர்வாக பொறுப்பு, ‘மெகா இன்ஜினியரிங்’ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. 36 இருக்கைகள், குளிர் சாதனம். சிசிடிவி கேமரா, தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகளை கொண்ட இந்த பேருந்து, பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிமீ இயக்கலாம். வரும் 25ம் தேதிக்கு முன்பாக இன்னும் 10 பேருந்துகள் வர உள்ளன. ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் சுவாமிக்கு முதல்வர் ஜெகன் பட்டு வஸ்திரம் சமர்பிப்பார். அப்போது, இந்த பேருந்து போக்குவரத்தை அவர் தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும் செய்திகள்
ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார்
பாலிவுட் நட்சத்திர காதல் ஜோடி கியாரா, சித்தார்த் திடீர் திருமணம்
'கட்சிகளிடம் ஒற்றுமையில்லாததால் 2019ல் மீண்டும் பாஜக ஆட்சி': மாநிலங்களவையில் பாஜக அரசை உப்புமாவுடன் ஒப்பிட்டு விமர்சித்த திருச்சி சிவா..!!
இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கில் ஸ்ரீகாளஹஸ்தியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி
வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்-4 மணிநேரம் தரிசனம் ரத்து
ஆன்லைன் சூதாட்டத்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுமா?: மக்களவையில் காங். எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்..!!
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!