மீஞ்சூர் அருகே பரிதாபம்; பைக் மீது லாரி மோதி தாய் கண்முன் மகன் பலி: டிரைவர் கைது
2022-09-10@ 01:25:03

பொன்னேரி: மீஞ்சூர் ராஜா தோப்பு பகுதி சேர்ந்தவர் அழகர்சாமி(36), இவர் சென்னையில் உள்ள துணிக்கடையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி மணி(32). இவர்களது மகன் சூர்யா(12). மீஞ்சூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், நேற்று மாலை சாந்தி மணி தனது மகனுடன் சென்னை அடுத்த மணலியில் உள்ள உறவினர் வீட்டு பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, டூவீலரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். வல்லூர் 100 அடி சாலை அருகே வரும்போது பின்னால் வந்த டிப்பர் லாரி, டூவீலர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில், நிலை தடுமாறி இவர்கள் கீழே விழுந்தனர். அப்போது, சூர்யா மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில், படுகாயம் அடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தான். மேலும் சாந்திமணி படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பலியான சூர்யாவின் உடலை மீட்டு, பிரதேச பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த சாந்திமணியை அதே மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்து, டிப்பர் லாரி டிரைவர் வைதிகமேடு கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
‘அனைவருக்கும் இ-சேவை மையம்’ திட்டத்தில் பொதுமக்கள் இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அமிர்தஜோதி அறிவிப்பு
லட்சக்கணக்கான தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: சென்னையில் நடந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: தலைமைச்செயலர் இறையன்பு அதிகாரிகளுக்கு உத்தரவு
கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய புதிய இலச்சினை அறிமுகம்
ரயில் மோதி வாலிபர் பலி
பயண அட்டை இருந்தால் மட்டுமே மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்த அனுமதி: நிர்வாகம் தகவல்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி