டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியருக்கு குவியும் பாராட்டு
2022-09-10@ 01:14:17

பள்ளிப்பட்டு: தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பள்ளிப்பட்டு அருகே ஆந்திர எல்லைப் பகுதியில் அத்திமாஞ்சேரி உள்ளது. இங்குள்ள, தெலுங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் மே.மு.மாதவன். தமிழ் இலக்கியவாதியான இவர் தெலுங்கு மொழி பேசும் மக்கள் நிறைந்த கிராமத்தில், தமிழக அரசு கட்டாய தமிழ் வழி கல்வி உத்தரவால், சிறுபான்மை மொழி பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர் பணியில் சேர்ந்து, கற்பித்தல் பணியில் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், மாணவர்களுக்கு தமிழ்மொழி, கல்வி மீது ஆர்வத்தை ஏற்படுத்தி அனைத்து மாணவர்களுக்கு கற்பித்தல் பணியில் சிறந்து விலங்கி வரும் அவருக்கு தமிழக அரசின் சார்பில் ஆசிரியர் தினத்தையொட்டி டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுகல் ஐ.லியோனி ஆகியோர் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கினர். தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ண விருது பெற்ற அரசுப்பள்ளி தமிழ்வழி கல்வி ஆசிரியர் மே.மு.மாதவனுக்கு கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்களின் பெற்றோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் பக்தி பரவசம்..!
நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையில் 19 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டது: சுகாதார அலுவலர் சங்கம் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு
விளாப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் கலைஞர் அரங்க கட்டிடம் திறப்பு
வருவாய் மீட்பு சட்டத்தில் அசல் ஆவணங்களை விடுவித்து கிரையதாரர்களிடம் ரூ.6 லட்சம் வசூல்
சோழவரம் ஏரியில் வாலிபர் சடலம் மீட்பு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!