குண்டும் குழியுமாக மாறிய பம்மல்; அண்ணா சாலை சீரமைக்க கோரிக்கை
2022-09-09@ 01:40:07

பல்லாவரம்: பம்மலில் இருந்து நாகல்கேணி மற்றும் திருநீர்மலை மெயின்ரோடு ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு அண்ணா சாலையே பிரதான சாலையாக உள்ளது. இச்சாலையில் ஏராளமான தோல் பதனிடும் தொழிற்சாலைகள், மீன் மார்க்கெட், கடைகள், பிரபல மருத்துவமனை, ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவை அமைத்துள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி சரக்குகளை கையாளுவதற்கான பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள் இந்த சாலையில் தான் செல்கின்றன. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பம்மல் அண்ணா சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
அதில் தற்போது மழைநீர் தேங்கி நிற்பதால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மீது சகதி விழுகிறது. தேங்கி நிற்கும் மழைநீரில் மேடு, பள்ளம் தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். அவசர காலத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட வாகனங்கள் விரைந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, இந்த சாலையை விரைந்து சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் செய்திகள்
சென்னை செனாய்நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் பொதுமக்களின் அனைத்து குடும்ப சுப நிகழ்ச்சிகள், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி: சென்னை மாநகராட்சி
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடம் 4-ல் மின்சாரம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடி மதிப்பில் ஒப்பந்தம்
சென்னை - பெங்களூரு விரைவுச்சாலைக்கு நிலம் எடுப்பில் ரூ.100 கோடி மோசடி..? அதிர்ச்சி தகவல்..!
ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்ககளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
மாணவர்கள் சுய ஒழுக்கத்துடன் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்: கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!