மீஞ்சூர், சோழவரம் மக்கள் நலன் கருதி எண்ணூரில் மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும்; பெண்கள் வலியுறுத்தல்
2022-09-09@ 01:39:22

அம்பத்தூர்: சென்னை பெருநகர காவல் ஆணையரகம் நிர்வாக வசதிக்காகவும், பொதுமக்களின் நலன் கருதியில் 3ஆக பிரிக்கப்பட்டு சென்னை, ஆவடி, தாம்பரம் என 3 ஆணையாளர்கள் கீழ் இயங்கி வருகிறது. இதில், ஆவடி ஆணையரகத்தில், ஆவடி காவல் மாவட்டம் மற்றும் செங்குன்றம் காவல் மாவட்டம் என பிரிக்கப்பட்டு 2 துணை ஆணையர்கள் தலைமையில் நிர்வாகம் செய்யபடுகிறது. செங்குன்றம் காவல் மாவட்டத்தின் கீழ் செங்குன்றம், மீஞ்சூர், சோழவரம், காட்டூர், அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், கொரட்டூர், மாதவரம் பால் பண்ணை, மணலி, மணலி நியூ டவுன், எண்ணூர் மற்றும் சாத்தங்காடு என 12 காவல் நிலையங்கள் உள்ளன. இதில் எண்ணூர் மற்றும் அம்பத்தூரில் 2 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. செங்குன்றம், மீஞ்சூர், சோழவரம், காட்டூர், அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், கொரட்டூர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குள் நடக்கும் பாலியல் குற்றங்கள், பெண்கள் வன்கொடுமை, போக்சோ போன்ற வழக்குகளை அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல் மாதவரம் பால் பண்ணை, மணலி, மணலி நியூ டவுன், எண்ணூர் மற்றும் சாத்தங்காடு ஆகிய காவல் நிலைய எல்லையில் நடக்கும் பாலியல் குற்றங்கள், பெண்கள் வன்கொடுமை, போக்சோ போன்ற வழக்குகளை எண்ணூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மீஞ்சூர் பகுதியில் இருந்து அம்பத்தூர் சுமார் 35 கிலோ மீட்டர் தூரம் என்பதால், மீஞ்சூர், சோழவரம், காட்டூர் பகுதிகளை சேர்ந்த பெண்கள், புகார் கொடுக்க அம்பத்தூர் காவல் நிலையம் செல்ல 2 மணி நேரம் பயணிக்க வேண்டியுள்ளது. மேலும், அவ்வாறு செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் சிரமப்படும் நிலை உள்ளது. சில நேரங்களில் இந்த அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதிகாரிகள் இல்லாததால் மறுநாள் வரும்படி கூறுவதால் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், பாதிக்கப்படும் பெண்கள் பலர் பயண தூரத்தை கருத்தில் கொண்டு புகார் கொடுக்க செல்வதில்லை. மேலும் தொடர்ந்து போலீசாரின் விசாரணைக்கு அடிக்கடி வரவழைப்பதால் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, மேற்கண்ட பகுதி பெண்கள் நலன் கருதி, மீஞ்சூர் பகுதியை சேர்ந்த பெண்களுக்கு அருகில் உள்ள எண்ணூர் காவல் நிலையத்தில் மகளிர் காவல் நிலையம் தொடங்கவும், செங்குன்றம் பகுதியில் மேலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் செய்திகள்
வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி இறந்த 4 பெண்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 8 ஏக்கரில் நவீன பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய 2 அமைச்சர்கள் அனுப்பிவைக்கப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் ரூ.19.29 கோடி தங்க நகைகள், 2.70 கோடி ரொக்கம் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது: நடப்பாண்டில் இதுவரை 32 குற்றவாளிகள் கைது
பொதுமக்கள் சானிட்டரி நாப்கின், டயப்பர் கழிவுகளை தனியாகப் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!