ஆப்கானிஸ்தான் வீரரை பேட்டால் அடிக்க முயன்ற பாகிஸ்தான் வீரர்; நேற்றைய போட்டியில் பரபரப்பு
2022-09-08@ 11:02:30

சார்ஜா: பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி, ஆப்கானிஸ்தான் வீரர் பரீத் அகமதுவை பேட்டால் அடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆசிய கோப்பை டி20 தொடரில் நேற்று சார்ஜாவில் நடந்த சூப்பர் 4 சுற்றில் கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றிபெற்றது. போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி, ஆப்கானிஸ்தான் வீரர் பரீத் அகமதுவை பேட்டால் அடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆட்டத்தின் 19வது ஓவரில் பரீத் பந்துவீச்சில் சிக்சர் அடித்த ஆசிப் அலி, அடுத்த பந்திலேயே ஆட்டம் இழந்தார். விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பரீத் ஆவேசமாக கத்திய நிலையில், ஆத்திரம் அடைந்த ஆசிப் அலி, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தனது பேட்டையும் ஓங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், நடுவர்களும் சக வீரர்களும் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
மேலும் செய்திகள்
மிடில் ஆர்டரிலும் பேட்டிங் செய்ய தயார்: கே.எல்.ராகுல் பேட்டி
நாக்பூரில் அசத்தப்போவது யார்? இந்தியா-ஆஸி. மோதும் முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்: டாப் 2 அணிகள் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு
ரஞ்சி அரையிறுதி இன்று தொடக்கம் முன்னாள் சாம்பியன்கள் கர்நாடகா - சவுராஷ்டிரா மோதல்
சர்வதேச கிரிக்கெட் பிஞ்ச் ஓய்வு
சில்லி பாயின்ட்...
நாக்பூரில் நாளை மறுநாள் முதல் டெஸ்ட் தொடக்கம்; 4 ஸ்பின்னர்களுடன் களம் இறங்க இந்தியா திட்டம்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!