உக்ரைன் போரால் பாதிப்பு புடினுக்கு மோடி கண்டிப்பு: மாநாட்டில் பரபரப்பு
2022-09-08@ 00:25:40

புதுடெல்லி: ரஷ்யாவில் உள்ள விளாவாஸ்டாக் நகரில் நேற்று நடந்த கிழக்கு பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்று பேசினார். இந்த கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புடினும் கலந்து கொண்டு பேசுகையில், ‘ரஷ்யாவில் முதலீட்டை அதிகரிக்க கடந்த 2015ம் ஆண்டு இந்த அமைப்பு துவங்கப்பட்டது. இது, ரஷ்ய துார கிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கான சர்வதேச ஒத்துழைப்பின் முதன்மை தளமாக மாறி உள்ளது. இன்றைய உலகமயமாக்கப்பட்ட உலகில், பூமியின் ஒரு பகுதியில் நடக்கும் நிகழ்வுகள் ஒட்டுமொத்த மனித குலத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ரஷ்யாவில் எரிசக்தி துறையில் மட்டுமின்றி, மருந்து மற்றும் வைரத் துறைகளில் குறிப்பிடத்தக்க முதலீடுகளை இந்தியா செய்துள்ளது. எரிசக்தி துறையில் ரஷ்யா உடனான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த இந்தியா விரும்புகிறது,’ என தெரிவித்தார். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. ஆனால், ஐநா.வில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானங்களை ஆதரித்து, இந்தியா வாக்களிக்காமல் ஒதுங்கி நிற்கிறது. இந்நிலையில், உக்ரைன் மீதான போரின் பாதிப்பு குறித்து, புடின் முன்னிலையில் பிரதமர் மோடி முதல்முறையாக விமர்சித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:
Impact of Ukraine war Putin Modi rebuke conference உக்ரைன் போரால் பாதிப்பு புடின் மோடி கண்டிப்பு மாநாட்டில்மேலும் செய்திகள்
திருப்பதி பைரெட்டிபள்ளி பகுதியில் ₹3.25 கோடியில் புதிய சிமெண்ட் சாலைகள், கால்வாய்கள்-எம்பி தகவல்
உணவு விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது குழந்தைகளின் உடல்நலம், கல்வியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்-ஆய்வு செய்த கலெக்டர் உத்தரவு
மத்திய பிரதேசம் மது கடைகளில் கோசாலைகளை தொடங்க போகிறேன்: உமா பாரதி ஆவேசம்
புதிய வரி விதிப்புத் திட்டத்தின் கீழ், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்வு
old polluted மாற்றம் என்று கூறுவதற்கு பதில் old political மாற்றம் என்று நிதியமைச்சர் கூறியதால் நாடாளுமன்றத்தில் சிரிப்பலை
நாடு முழுவதும் 50 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு; புதிய விமான நிலையங்கள் அதானிக்கா என எதிர்க்கட்சிகள் முழக்கம்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!