இலங்கை வசம் உள்ள 23 தமிழக மீனவர்கள், 95 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
2022-09-08@ 00:10:37

சென்னை: இலங்கை வசம் உள்ள 23 தமிழக மீனவர்களையும், 95 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: கடந்த 9 மாதங்களில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 150 தமிழக மீனவர்களை தூதரக நடவடிக்கைகள் மூலம் விடுவிக்க உதவியமைக்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிலையில் கடந்த 6ம் தேதி புதுச்சேரியை சேர்ந்த விசைப்படகில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் கவனத்தை ஈர்க்கிறேன். தற்போதைய நிலவரப்படி, இலங்கை அரசின் வசம் 23 தமிழக மீனவர்களும், 95 மீன்பிடி படகுகளும் உள்ளன. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்கு தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
Tags:
23 Tamil Nadu fishermen 95 boats in possession of Sri Lanka to release Chief Minister's letter to the Minister of External Affairs இலங்கை வசம் 23 தமிழக மீனவர்கள் 95 படகு விடுவிக்க வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்மேலும் செய்திகள்
சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரயில்: பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்
வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி இறந்த 4 பெண்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 8 ஏக்கரில் நவீன பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய 2 அமைச்சர்கள் அனுப்பிவைக்கப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் ரூ.19.29 கோடி தங்க நகைகள், 2.70 கோடி ரொக்கம் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது: நடப்பாண்டில் இதுவரை 32 குற்றவாளிகள் கைது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!