வேளாங்கண்ணி ஆலய தேர் திருவிழா: பெசன்ட்நகர் பகுதியில் இன்று மாலை போக்குவரத்து மாற்றம்
2022-09-07@ 17:13:38

சென்னை: பெசன்ட்நகர் வேளாங்கண்ணி ஆலய தேர் திருவிழாவையொட்டிபெசன்ட்நகர் பகுதியில் இன்று மாலை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய வருடாந்திர திருவிழாவினை முந்நிட்டு 07.09.2022 அன்று நடைபெறவிருக்கும் தேர் பவனியை கருத்தில் கொண்டு, பெசன்ட் நகருக்கு ஏராளமான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 07.09.2022 அன்று மாலை 17-00 மணி முதல் 21-00 மணி வரை பின்வரும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படும்.
* திரு.வி.க. பாலம், எஸ்.வி.படேல் சாலையில் இருந்து பெசன்ட் அவின்யூ வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையம் நோக்கி செல்ல விரும்பும் வாகனங்கள் ஆவின் பூங்காவில் இருந்து தடைசெய்யப்பட்டு, எல்.பி. சாலை வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்டு அவர்கள் இலக்கை அடையலாம்.
* 7வது அவென்யூ மற்றும் எம்.ஜி.ரோடு சந்திப்பில் இருந்து அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் நோக்கி வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.
* M.L பூங்காவிலிருந்து MTC பேருந்துகள், பெசன்ட் அவென்யூ வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தை நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது. மேற்கண்ட வாகனங்கள் ஆவின் பூங்கா, எல்.பி சாலை வழியாக, எம்.ஜி. சாலை, பெசன்ட் நகர் 1வது பிரதான சாலை வழியாக சென்று இலக்கை அடையலாம்.
* பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திலிருந்து திருவான்மியூர் மற்றும் அடையாறு சிக்னல் நோக்கிச் செல்லும் MTC பேருந்துகள் சாஸ்திரி நகர் 1வது அவென்யூ மற்றும் L.B. சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.
மேலும் செய்திகள்
பிரபல இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறையில் 1,083 காலியிடங்கள்: தேர்வுக்கு மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கூட்டணி கட்சியின் உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு: பாஜ தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் கடிதம்
அமெரிக்காவில் உயிரிழப்பு, பார்வை பறிபோன விவகாரம் சென்னை கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை: ஒன்றிய அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!