உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளம்-சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
2022-09-07@ 14:26:34

உடுமலை : உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் காரணமாக முன்னெச்சரிக்கையாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் அருவி பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவிக்கு தினசரி சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகின்றனர். அங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அருவியில் தவறாமல் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும் மழை காரணமாக, பஞ்சலிங்க அருவியில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
நேற்று அதிகாலையிலும் பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. திருமூர்த்தி மலை அடிவாரத்தில் உள்ள கோயில் மண்டபத்தை சூழ்ந்தபடி வெள்ளநீர் பெருக்கெடுத்தது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கையாக அருவியில் குளிக்க பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வனத்துறையினர் தொடர்ந்து நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் பயணிகளுக்கு தடை விதிப்பால், அருவி பகுதி ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி காட்சியளித்தது.
மேலும் செய்திகள்
3 மாதங்களில் 10,673 வழக்குகள் பதிவு போதைப்பொருட்களை ஒழிக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை: முதல்வருக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு
கலசபாக்கம் செய்யாற்றில் அண்ணாமலையாருக்கு பக்தர்கள் வெள்ளத்தில் ரதசப்தமி தீர்த்தவாரி
தேன் கொள்முதலுக்கான விலையை உயர்த்த வழக்கு: காதி வாரியம் பரிசீலிக்க உத்தரவு
நாஞ்சில் சம்பத்திடம் அமைச்சர் நலம் விசாரித்தார்
புதுவையில் 30, 31ம் தேதிகளில் ஜி20 மாநாட்டுக்காக 5 இடங்களில் 144 தடை
தர்மபுரி அருகே அட்டகாசம் யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!