திருவள்ளூர் அருகே கோலம் கொண்ட அம்மன் கோயிலில் இருந்து வேம்புலி அம்மனுக்கு சீர்வரிசை புறப்பாடு
2022-09-07@ 14:15:03

திருவள்ளூர்: ஜாத்திரை உற்சவ விழாவை முன்னிட்டு திருவள்ளூரில் உள்ள வேம்புலி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி மற்றும் யாத்திரை உற்சவம் கடந்த 2ம் தேதி தொடங்கியது. ெதாடர்ந்து இன்று முகமது அலி தெருவில் உள்ள ஸ்ரீ கோலம் கொண்ட அம்மன் கோயிலில் இருந்து சகோதரி வீடான வேம்புலி அம்மனுக்கு சீர்வரிசை கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அம்மனுக்கு இனிப்பு வகைகள், பழ வகைகள், பலவிதமான மலர்கள்,
வேட்டி- சேலை ஆகிய சீதனத்துடன் புறப்பட்டு தாரை, தப்பட்டை, பம்பை உடுக்கை, சிலம்பு ஆகியவற்றுடன் புறப்பட்டு பஜார் வீதி, வடக்கு ராஜ வீதி, மோதிலால் தெரு, காக்களூர் சாலை வழியாக வேம்புலி அம்மன் கோயிலை அடைந்தது. தொடர்ந்து இரவு வேம்புலி அம்மன் வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை வேம்புலி அம்மன் சேவா சங்கம் மற்றும் கிராமத்தார்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
“கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தினை பிப்.1ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கடுமையான குளிர், பயணிகள் எண்ணிக்கை குறைவால் சென்னையில் 6 விமானங்கள் ரத்து
நாளை முதல் பிப். 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சொத்து உரிமையாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
ஓட்டேரி நல்லா கால்வாயில் ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்தார்: அமைச்சர் பி.கே. சேகர்பாபு
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக தனித்தே களம் காண்கிறது: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!