சீரமைப்பு பணிகள் நிறைவு; மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் துவக்கம்.!
2022-09-07@ 09:25:42

ஊட்டி: பாறாங்கற்கள் விழுந்த தண்டவாளம் சீரமைக்கும் பணி நடந்தது. இதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரயில் போக்குவரத்து மீண்டும் இன்று தொடங்குகிறது. நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் பாதையில் கல்லாறு -ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே மண்சரிவு ஏற்பட்டு ரயில் தண்டவாள பாதையில் பெரிய சிறிய பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன. மண் சரிந்து ரயில் பாதையை மூடியது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 180 சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற மலை ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு இயக்கி வரப்பட்டது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மற்றும் ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவையை கடந்த 5 ஆம் தேதி 6-ந் தேதி ஆகிய இரண்டு நாட்கள் ரயில்வே நிர்வாகம் ரத்து செய்தது.
இதனையடுத்து மேட்டுப்பாளையம் குன்னூர் ரயில்வே தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குன்னூர் மலை ரெயில் இருப்புப் பாதை பொறியாளர் மேற்பார்வையில் ரயில் தண்டவாள பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரயில் பாதையில் உருண்டு விழுந்து கிடந்த ராட்சத பாறைகள் கம்ப்ரசர் மூலம் துளையிட்டு வெடிவைத்து தகர்க்கப்பட்டன. வெடித்து சிதறிய கற்களை அகற்றிய பின்னர் ரயில் பாதையை மூடி இருந்த மண்ணை ரயில்வே தொழிலாளர்கள் அகற்றினர்.
ரயில் பாதையில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்ததால் சுமார் 20 மீட்டர் நீளத்திற்கு ரயில் தண்டவாளம் மற்றும் ராக் பார்கள் உடைந்து வளைந்து சேதமடைந்தன. ரயில்வே தொழிலாளர்கள் சேதமடைந்த தண்டவாளம் மற்றும் ராக்பார்களை அகற்றிவிட்டு புதிய தண்டவாளம் மற்றும் ராக் பார்களை பொருத்தினார்கள். ரயில் பாதையை சீரமைக்கும் பணி முழுவதும் நேற்று மாலை 6:30 மணிக்கு முடிவடைந்தது. இதனை தொடர்ந்து ரெயில் பாதையை சீரமைக்கும்பணி முழுவதும் முடிவடைந்ததால் 2 நாட்களுக்கு பின்னர் இன்று முதல் வழக்கம்போல் மேட்டுப்பாளையம் -ஊட்டி, மற்றும் ஊட்டி -மேட்டுப்பாளையம் மலை ரயில் போக்குவரத்து சேவை தொடங்கும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
தாளவாடி மலைப் பகுதியில் மின் கம்பத்தை சேதப்படுத்திய காட்டு யானை: சிசிடிவி வீடியோ பரபரப்பு காட்சி
அரசு பேருந்து மோதி கோயில் குதிரை உயிரிழப்பு: பக்தர்கள் சோகம்
வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழா 100 சேவல், 150 கிடாய் வெட்டி 2500 கிலோ அரிசியில் பிரியாணி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.23.71 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கேரட், பீட்ரூட்டை சமவெளியில் சாகுபடி செய்து மண் காப்போம் இயக்கம் சாதனை!.. விவசாயிகளுக்கு வழிகாட்டும் ஈஷாவின் மாதிரி பண்ணை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் பறக்கும் படையினர் பணப்பட்டுவாடாவை தடுக்க மும்முரம்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!