டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமை ஆசிரியைக்கு சிறப்பு வரவேற்பு
2022-09-07@ 01:47:26

செய்யூர்: டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதியன்று ஒவ்வொரு ஆண்டும், மாநில அளவில் பள்ளிகளில் சிறப்பாக சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறப்பாக சேவையாற்றிய 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலினால் வழங்கப்பட்டது. இந்த 10 பேரில் மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ள சாலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கவிதாவும் ஒருவர்.
இந்நிலையில், விருது பெற்ற தலைமை ஆசிரியை கவிதாவிற்கு சாலையூர் ஊராட்சி மக்கள் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளித்து சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி நேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தல், மாணவர்களுக்கு புரியும் வகையில் கல்வி புகட்டுதல், பள்ளியை தூய்மையாக வைத்திருத்தல் ஆகியவற்றிக்காக இவ்விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தேதிகள் அறிவிப்பு: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி மே 19ல் தொடக்கம்!!
கோவையில் துப்பாக்கியுடன் கைதான இந்து முன்னணி நிர்வாகியிடம் போலீசார் தீவிர விசாரணை
மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர் முகாம்
பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி சாலையில் பாலை கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டம்-முசிறி அருகே பரபரப்பு
கள்ளிக்குடி அருகே களப்பலி நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு
வத்திராயிருப்பு பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!