பள்ளி மாணவர்களின் தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்த அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பாக “திறனறித் தேர்வு” அறிவிப்பு
2022-09-06@ 14:41:38

சென்னை: பள்ளி மாணவ /மாணவியர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப் பெருமளவில் தயாராகிப் பங்குபெறுவதைப் போன்று தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் “திறனறித் தேர்வு” அரசு தேர்வுகள் இயக்ககம் வாயிலாக நடைபெறவுள்ளது. 2022-2023ம் கல்வியாண்டில் அரசுப்பள்ளி மற்றும் அனைத்துவகை பள்ளியில் பயிலும் (சி.பி.எஸ்.இ/ஐ.சி.எஸ்.இ) பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் / மாணவிகள் இத்தேர்வினை எழுத செப்டம்பர் 9 வரை www.dge.tn.gov.in <http://www.dge.tn.gov.in> என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாடம் இதற்கான பாடத்திட்டம் ஆகும்.
இத்தேர்வு கொள்குறி வகையில் நடைபெறும். ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் 100 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்படும். இத்தேர்வு அக்டோபர் 1ம் தேதி அன்று முற்பகல் 10.00 - 12.00 வரை நடைபெறும். இத்தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டினை மேற்குறிப்பிடப்பட்ட இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இத்தேர்வில் வெற்றிபெறும் 1500 மாணவ / மாணவியர்களுள் 750 அரசு பள்ளி மாணவர்களும் 750 இதர பள்ளி மாணவர்களுக்கும் திங்கள் ஒன்றுக்கு ரூ.1500/- இரண்டு ஆண்டுகளுக்கு தொகை வழங்கப்படவிருக்கிறது.
மேலும் செய்திகள்
உயிர் நீத்த காவல் துறையினருக்கு இறுதி மரியாதை தொடர்பாக அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை.!
வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் இன்று வழங்கப்படும் என அறிவிப்பு: உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து இபிஎஸ் அணி நடவடிக்கை!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கன மழை காரணமாக நெற்பயிர் பாதித்த உழவர்களுக்கு உரிய இழப்பீடு அன்புமணி வலியுறுத்தல்
அண்ணா நினைவுநாளையொட்டி இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை
4 லட்சம் பேர் எழுதுகின்றனர் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடங்கியது: சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!