வ.உ.சி பிறந்தநாள் விழாவில் மோடி குறித்த கேள்விக்கு வைகோ காட்டம்
2022-09-06@ 00:02:23

கோவை: கோவையில் நடந்த வ.உ.சி பிறந்தநாள் விழாவில் ‘‘உயர்ந்த தலைவரை பற்றி பேசும்போது, யாரையோ பற்றி பேசுகிறீர்கள்’’ என மோடி குறித்த கேள்விக்கு வைகோ காட்டமான பதில் அளித்தார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி 151வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கோவை மத்திய சிறையில் உள்ள வ.உ.சி இழுத்த செக்கிற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மலர் தூவி மரியாதை செலுத்த வந்தார். அப்போது அவர் அளித்த ேபட்டி: அவிநாசி சாலைக்கு வ.உ.சி பெயர் வைப்பது குறித்த நீண்ட நாள் கோரிக்கை தொடர்பான கேள்விக்கு முதலமைச்சரிடம் சொன்னால், செய்வார் என்றார்.
கோவையில் வ.உ.சி.க்கு சிலை வைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது வைகோவிடம், பிரதமர் மோடி படத்தை அரசு அலுவலங்களில் வைப்பது குறித்த கேள்வி எழுப்பிய போது, ‘‘உயர்ந்த தலைவரை பற்றி பேசும்போது, யாரையோ பற்றி பேசுகிறீர்கள்’’ என்று வைகோ காட்டமாக பதில் அளித்தார். இதையடுத்து செக்கிற்கு மதிமுக பொதுசெயலாளர் வைகோ மரியாதை செலுத்த சென்றபோது, அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி எதிரே வந்தார். அப்போது வைகோவும், வேலுமணியும் சந்தித்து ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்து கைகுலுக்கி கொண்டனர்.
மேலும் செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம்; காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் என 4 முனை போட்டி: முற்றுகையிட்டு வரும் கட்சி தலைவர்களால் சூடுபிடித்த இடைத்தேர்தல்
அதானி பங்கு வீழ்ந்ததை போல் மோடியும் வீழ்வார்: மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி பேச்சு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியல் வெளியீடு: ஓபிஎஸ் அணி பட்டியல் நிராகரிப்பு
கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் 300 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்த சித்தூர் எம்எல்ஏ-தெலுங்குதேசம் கட்சி பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு
ஓபிஎஸ் தரப்பினர் பேட்டி இபிஎஸ் தரப்புக்கு சின்னம் போனதால் பின்னடைவு இல்லை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எடப்பாடி அணி வேட்பாளருக்கு பாஜ முழு ஆதரவு அளிக்கும்: அண்ணாமலை அறிவிப்பு
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!